செய்திகள் :

40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு

post image

கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்ஆட்சிப் பொறுப்பேற்றபின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களால் தமிழ்நாட்டிலிருந்து வறுமை முற்றிலும் அகற்றப்பட்டு மக்கள் பசிப்பிணி ஒழிந்து வளமான வாழ்வில் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகள் வாயிலாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது.

முதல்வரின் அறிவுரைப்படி, ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1,666 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன.

31.12.2023 வரை நியாய விலைக் கடைகளின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழலை மேம்படுத்துவதற்கான பணிகள் 2,778 நியாய விலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தொடங்கியது டோக்கன் விநியோகம்

அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கிலோ வீதமும். ஏனைய பகுதிகளில் 5 கிலோ

வீதமும் நியாய விலைக் கடைகளின் இருப்பைப் பொறுத்து அவர்களது விருப்பத்தின்படி அரிசிக்குப் பதிலாகக் கோதுமை விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

இதுவரை 7 இலட்சத்து 23 ஆயிரத்து 482 மெ.டன் கோதுமை விலையில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைந்த தலைவர்களுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில் ... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைப்பு!

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.87 அடியில் இருந்து 117.21 ... மேலும் பார்க்க

விராலிமலையில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை!

விராலிமலை: விராலிமலை அம்மன் கோயிலில் மார்கழி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜையின் 7-வது பூஜை இன்று அதிகாலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் 5 ஆயிரம் பெண்கள் ... மேலும் பார்க்க

மாவட்டங்கள் - வயது வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளாா்.இது குறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பட்டியல்:1. திருவள்ளூா் 35,31,0452. சென... மேலும் பார்க்க

இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம்!

சென்னை: இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம் திகழ்ந்து வருவதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உரை விவரம்:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழகம், இந்... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.அதேநேரத்தில், உள்மாவட்டங்களில் வட வானிலையே நிலவும் என சென்னை வானி... மேலும் பார்க்க