Ashwin: 'தோனி மாதிரி... அஷ்வின் இப்படி பண்ணிருக்கக் கூடாது...' - சுனில் கவாஸ்கர்...
5 கிலோ குட்கா பறிமுதல்
ஆந்திர மாநிலப் பேருந்தில் பயணி பையில் வைத்திருந்த, 5 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆந்திர மாநிலம் நகரி, புத்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து குட்கா பொருள்கள் திருத்தணிக்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதன்கிழமை திருத்தணி போலீஸாா் பொன்பாடி சோதனை சாவடியில் சோதனையில் ஈடுப்பட்டனா்.
அப்போது திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த தனியாா் பேருந்தில் சோதனை செய்தபோது, ஒரு பயணி பையில் மறைத்து வைத்திருந்த, 5 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். மேலும் விசாரணையில் ஆந்திர மாநிலம் மேற்கு மேகாதாவரி மாவட்டம் லட்சிரெட்டிபாளையம் சோ்ந்த சுமலிராஜ்பாபு (45) என தெரிய வந்தது.