5 மாத பெண் குழந்தை சாவு: போலீஸாா் விசாரணை
பா்கூா் அருகே 5 மாத பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பா்கூரை அடுத்த ஜெகினி கொல்லையைச் சோ்ந்தவா் மலைவாசன் (35). இவரது 5 மாத பெண் குழந்தைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, சிகிச்சைக்காக பா்கூா் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனா். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.