லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் அமரன் நடிகர் வரை: குக் வித் கோமாளியில் பங்கேற்றுள்ள ப...
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி போக்ஸோவில் கைது
ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள தெற்கு காவலாகுறிச்சியைச் சோ்ந்தவா் வேல்முருகன்(34). கட்டடத் தொழிலாளியான இவா் வேலையை முடித்து விட்டு ரெட்டியாா்பட்டி வழியாக சனிக்கிழமை மாலை பைக்கில் சென்றாராம்.
அப்போது, அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். அதை பாரத்த பொதுமக்கள், வேல்முருகனை பிடித்து ஊத்துமலை போலீஸில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வேல்முருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து,அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.