செய்திகள் :

50 போட்டிகளில் 36 க்ளீன் ஷீட்ஸ்..! பிரமிக்க வைக்கும் ஆர்ஜென்டீன கோல்கீப்பர்!

post image

கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி 3-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது ஆா்ஜென்டீனா அணி. 

இந்தப் போட்டியில் சிறப்பாக கோல்கீப்பிங் செய்து உலகப் புகழ்பெற்றவர்தான் எமிலியானோ மார்டினெஸ்.

32 வயதாகும் இவர் தற்போது ஆா்ஜென்டீனா அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.

2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆா்ஜென்டீனா அணி உருகுவேவை 1-0 என வென்றது.

இந்த அசத்தல் வெற்றியின் மூலம் ஆா்ஜென்டீனா அணி அடுத்த போட்டியில் டிரா ஆனாலே தகுதிபெற்றுவிடும்.

இந்தப் போட்டியில் பல கோல்களை தடுத்தார் எமிலியானோ மார்டினெஸ்.

50 தேசிய கால்பந்து போட்டிகளில் 36 க்ளீன் ஷீட்ஸ் பெற்று அசத்தியுள்ளார். கிளீன் ஷீட்ஸ் என்பது எதிரணியினர் ஒரு கோல்கூட அடிக்காமல் தடுப்பதாகும்.

அதிக போட்டிகள் விளையாடிய ஆர்ஜென்டீனாவின் தலைசிறந்த 3ஆவது கோல்கீப்பராக உருவாகியுள்ளார் எமிலியானோ மார்டினெஸ்.

இதற்கு முன்பாக, உபால்டோ ஃபிலோல் 54 போட்டிகள், செர்ஜியோ ரொமாரியோ 96 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்கள்.

விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற டிராகன் படக்குழு!

நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்யை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்ட டிராகன் படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ... மேலும் பார்க்க

ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி!

நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ள... மேலும் பார்க்க

நீண்டநாள் காத்திருப்புக்குப் பிறகு ஒளிபரப்பாகும் புதிய தொடர்!

ஆடுகளம் தொடரின் முன்னோட்டக் காட்சி ஒளிபரப்பாகி 4 மாதங்கள் ஆன நிலையில், இத்தொடரின் ஒளிபரப்பு நேரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ... மேலும் பார்க்க

டிக்கெட் முன்பதிவிலேயே ரூ. 60 கோடி வசூலித்த எம்புரான்!

எம்புரான் திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. நடிகர் பிருத்விராஜ் இயக்கிய எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகிறது. லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம... மேலும் பார்க்க

இதயம் - 2 தொடரின் சிறப்புத் தோற்றத்தில் வீரா நாயகன்!

இதயம் - 2 தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் அருண் நடித்துள்ளார். இவர் வீரா தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். வீரா தொடரில் இவரின் வசீகரமான தோற்றத்துக்கும் நடிப்புக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துவரு... மேலும் பார்க்க

மாநில முதல்வரானால் என்ன செய்வீர்கள்? சுவாரஸ்யமாக பதிலளித்த டொவினோ தாமஸ்!

எம்புரான் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் டொவினோ தாமஸ் சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.நடிகர் பிருத்விராஜ் இயக்கிய எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகிறது. லூசிஃபர் படத்தின் இரண்டாம் ... மேலும் பார்க்க