500 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை எட்டினார் எலான் மஸ்க்!
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக வரலாற்றில் 500 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி 400 பில்லியன் டாலர்களை எட்டிய எலான் மஸ்க் அடுத்த ஒருவாரத்தில் 100 பில்லியன் டாலர்கள் சம்பாரித்து அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.
மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேட்டரிகளை விற்பனை செய்யும் உலகின் மிகவும் மதிப்புமிக்க கார் தயாரிப்பாளரான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், நாசாவல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ராக்கெட் உற்பத்தியாளரான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தையும் வழிநடத்துகிறார்.
இதையும் படிக்க..: சர்வதேசப் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு!
சமூக ஊடக தளமான டுவிட்டர்(எக்ஸ்), நியூராலிங்க் , எக்ஸ்ஏஐ மற்றும் போரிங் கம்பெனி போன்ற பிற முக்கிய நிறுவனங்களுக்கும் எலான் மஸ்க் தலைமை வகித்துவருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். அதன்பின்னர் அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்புக்கு தனது ஆதரவைத் தெரிவித்து பிரசாரங்களிலும் கலந்து கொண்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், மஸ்க்கின் பங்குகள் பலமடங்கு உயர்ந்தது. கிட்டத்தட்ட 65 சதவீதம் அதிகரித்தது. சமீபத்தில் அமெரிக்க அரசு செயல் திறன் துறை தலைவராகவும் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க..:ஆஸி.யின் வெற்றியை தட்டிப்பறித்த மழை! சமனில் முடிந்தது காபா டெஸ்ட்!
அதன்பின்னர், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனப் பங்குகள் பலமடங்கு உயரத் தொடங்கியதும் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் 19.2 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 474 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. தற்போது 500 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும், எலான் மஸ்க் 245 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளார்.
எலான் மஸ்க் தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடத்திலும், முகநூல் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.