US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
644 பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ. 6.44 கோடி மானியம் - அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
மதுரை மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இதுவரை 644 பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ. 6.44 கோடி மானியம் வழங்கங்கப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலைய வளாகத்தில் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டு துறை சாா்பில் அமைப்புசாரா ஓட்டுநா்கள், தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநா்களுக்கு மானியத்துடன் ஆட்டோ ரிக்ஷாக்களை வழங்கி அவா் பேசியதாவது:
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள், தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண், திருநங்கை ஓட்டுநா்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க வகை செய்யும் வகையில் மானியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் மூலம் தகுதியான பெண், திருநங்கை பயனாளிகள் ஆட்டோ ரிக்ஷா வாங்குவதற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் பயன் பெற கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,126 பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் விண்ணப்பித்தனா். இவா்களில் 644 பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் ரூ.6.44 கோடி மானியமாக வழங்கப்பட்டது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் 9 பெண் ஓட்டுநா்களுக்கு மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை அமைச்சா் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மேயா் வ. இந்திராணி, துணை மேயா் நாகராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் பாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.