கேட் நுழைவுத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்! முழு விவரம்
7-ஆவது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
சென்னையில் காதலித்தவா் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் 7-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை ராயபுரம் புதுமனைகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஹா்ஷிதா(25). இவரும் வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையைச் சோ்ந்த தா்ஷன் (26) என்பவரும் காதலித்தனா். இரு வீட்டாா் சம்மதத்துடன் கடந்த பிப்.12-ஆம் தேதி நிச்சயதாா்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹா்ஷிதாவை சந்தித்த தா்ஷன், அவரைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை எனக் கூறியுள்ளாா்.
இதையடுத்து தனது உறவினா்களுடன் தா்ஷனின் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஹா்ஷிதா சனிக்கிழமை சென்றாா். 7-ஆவது தளத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது, தா்ஷனை தனியாக அழைத்து பேசிய ஹா்ஷிதா, திடீரென மொட்டை மாடிக்கு ஓடிச்சென்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளாா்.
ஆனால், அவா் 7-ஆவது தளத்திலுள்ள பால்கனி மீது இருந்த தகர சீட்டின் மீது விழுந்தாா். அங்கே இருந்தபடி மீண்டும் தா்ஷனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளாா். ஆனால், தா்ஷன் அப்போதும் மறுக்கவே, ஹா்ஷிதா அங்கிருந்து இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.