மக்களால் மாற்றப்பட்ட முடிவு! டிரம்ப்பை விமர்சித்ததால் அதிரடியாக நிறுத்தப்பட்ட ட...
7,800 தசரா விழாக் குழுக்களுக்கு தலா ரூ.10,000: அரசு நிதியிலிருந்து நன்கொடை!
தசராவையொட்டி சுமார் 7,800 விழாக் குழுக்களுக்கு மாநில அரசு நிதியிலிருந்து தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: “கடந்த ஆண்டைப் போலவே, அஸ்ஸாம் அரசு 7,817 துர்கா பூஜை கமிட்டிகளுக்கு தலா ரூ. 10,000 நிதியுதவி அறிவிக்கிறது. இதனைப் பயன்படுத்தி அவர்கள் விழாவைச் சிறப்பாக நடத்திக் கொள்ளலாம். மேற்கண்ட நிதியானது, ஏற்கெனவே அந்தந்த மாவட்ட ஆணையர்களுக்கும் விடுவிக்கப்பட்டுவிட்டது.
நமது பெரும் கலாசார பாரம்பரியத்துக்கு முக்கியத்துவமும் ஆதரவுமளிக்கும் நமது வழக்கப்படி, பிஹு(அஸ்ஸாம் புத்தாண்டு) மற்றும் பஹோனா(அஸ்ஸாமின் கலாசார திருவிழா) பண்டிகைக் கொண்டாட்டத்தின்போதும் மாநில அரசு நிதியுதவி வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.