சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
7 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்
கள்ளக்குறிச்சியில் அதிக ஒலி எழுப்புவதாக கண்டறியப்பட்ட 7 பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.
மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவின் பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் விஜய்
மற்றும் அலுவலக பணியாளா்கள் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்ட பேருந்துகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் 7 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒளிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டறிந்து அவற்றை அகற்றினா்.
மேலும், இதுபோல ஒலிப்பான்களை பொருத்தக்கூடாது என எச்சரித்தனா்.