செய்திகள் :

`8 மாத ஆட்சிக்காலத்தில், அமெரிக்காவிற்கு என்னென்ன செய்தேன்?' - ட்ரம்ப் பட்டியல்

post image

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஐ.நா பொது சபையில் உரையாற்றினார்.

அப்போது தான் அதிபராகப் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க நலனுக்கு என்னென்ன செய்துள்ளார்? என்பதை விளக்கியிருந்தார் ட்ரம்ப். அவை;

அமெரிக்காவின் பொருளாதாரம்

"என்னுடைய வெறும் 8 மாதக்கால ஆட்சியில், தற்போது உலகத்திலேயே அமெரிக்கா 'ஹாட்டஸ்ட் நாடாக' உள்ளது.

அமெரிக்காவில் இப்போது எரிசக்தியின் விலை, பெட்ரோல், மளிகைப்பொருள்கள், அடமான வட்டி ஆகியவை குறைந்துள்ளன, பணவீக்கம் சரிந்துள்ளது.

ட்ரம்ப் | ஐ.நா சபை
ட்ரம்ப் | ஐ.நா சபை

இந்தக் குறுகிய காலத்தில், பங்குச்சந்தை 48 முறை உச்சத்தைத் தொட்டுள்ளது. அமெரிக்காவில் ஊதியங்கள் உயர்ந்து வருகின்றன.

நான்கு ஆண்டுகளில், முன்னாள் அதிபர் பைடன் அமெரிக்காவிற்கு 1 டிரில்லியன் டாலருக்கும் குறைவான முதலீடுகளைத் தான் கொண்டு வந்தார்.

ஆனால், என்னுடைய 8 மாத ஆட்சிக்காலத்தில் 17 டிரில்லியன் டாலர் புதிய முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளேன். அமெரிக்காவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வரி ரத்துகளைக் கொண்டு வந்துள்ளேன்.

எல்லை பாதுகாப்பு

கடந்த நான்கு மாதங்களாக, அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றங்கள் நிகழ்வது ஜீரோ ஆகியுள்ளது.

இனி யாராவது அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறினால், ஒன்று சிறைக்கு அனுப்பப்படுவார்கள் அல்லது திரும்ப அவர்களது நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள்.

ட்ரம்ப் | ஐ.நா சபை
ட்ரம்ப் | ஐ.நா சபை

பொது அமைதி

தற்போது நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் குற்றங்கள் குறைந்துள்ளன.

அமெரிக்காவில் இருந்து 1,700 தொழில்முறை குற்றவாளிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும், கிரிமினல் கும்பல்களையும் 'தீவிரவாத அமைப்பாக' அறிவித்திருக்கிறோம்.

அமெரிக்கா

அடுத்த ஆண்டு, அமெரிக்கா 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. அடுத்தடுத்து FIFA உலகக் கோப்பை, 2026-ஐயும், ஒலிம்பிக்ஸ், 2028-ஐயும் அமெரிக்கா நடத்த உள்ளது," என்று ட்ரம்ப் தனது உரையில் தெரிவித்தார்.

ஊட்டி: "நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் ஸ்டாலின்" - இபிஎஸ் தாக்கு

'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்... மேலும் பார்க்க

ஜெய்சங்கர்-மார்கோ ரூபியோ சந்திப்பு: `இந்தியாவின் அதிக எரிசக்தி தேவை புரிகிறது!' - ரூபியோ கருத்து

நேற்று முன்தினம் அமெரிக்கா நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இவர்கள் இருவரும் வர்த்தகம், எரிசக்தி, மருத்துவம், மு... மேலும் பார்க்க

தமிழக பாஜக: அடுத்தடுத்த டெல்லி விசிட்; நயினாரின் திட்டம் என்ன?

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் வெளியேறல், முன்னாள் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் என தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் சலசலப்புகள் நீடித்து வருகின்றன. இந்தப் பரபர... மேலும் பார்க்க

விஜய் என்ன சொல்றது... திமுகவை எங்கள் கூட்டணியால் தான் வீழ்த்தமுடியும் - வானதி சீனிவாசன் பளிச்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜிஎஸ்டி வரி குறைப்பால் வியாபாரம், பொருளாதாரம் வளரும். வரி குறைப்பினால் உற்பத்தி பெருகும். மக... மேலும் பார்க்க

VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி? | Imperfect Show

* Amit Shah: "மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்'' - அமித் ஷா பேட்டி * GST: AC & TV விற்பனை அமோகம்?* பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - கே.டி.ராமராவ்* GST : ஆவின... மேலும் பார்க்க