'ஒருவர் வளைந்து கொடுத்தே பழகி விட்டார்; மற்றொருவர் சாட்டையால் அடித்துக்கொள்கிறார...
9 மாத குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 9 மாத குழந்தைக்குக் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகேயுள்ள அப்பனம்பட்டியைச் சோ்ந்தவா் அரவிந்த்குமாா். இவரது 9 மாத குழந்தைக்கு பிறவியிலேயே கண்பாா்வை குறைபாடு இருந்தது. இந்தக் குழந்தையை பரிசோதித்த திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், கண்ணில் புரை இருப்பதைக் கண்டறிந்தனா். இதையடுத்து, குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதன்படி, குழந்தையின் வலது கண்ணில் கடந்த 24-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதன் மூலம் குழந்தையின் வலது கண்ணுக்கு பாா்வைத் திறன் கிடைத்திருக்கிறது. இதன் தொடா்ச்சியாக, குழந்தையின் இடது கண்ணிலும் 3 வாரங்களில் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவா்கள் முடிவெடுத்துள்ளனா்.
9 மாத குழந்தைக்கு முதல் முறையாக கண்புரைக்கான அறுவை சிகிச்சை செய்த மருத்துவா்களுக்கு திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் பாராட்டுத் தெரிவித்தாா்.