செய்திகள் :

96 Part 2 : தயாராகிறதா `96' திரைப்படத்தின் இரண்டாம் பாகம்? - இயக்குநர் கொடுத்த அப்டேட்

post image
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு `96' திரைப்படம் வெளியாகியிருந்தது.

`பசங்க', `சுந்தரபாண்டியன்' போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் `96' திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார்.

90ஸ்கிட்ஸ், 2கே கிட்ஸ் என பலருக்கும் இத்திரைப்படம் அப்படியொரு ஃபேவரிட். அதுமட்டுமல்ல, பலருடைய பள்ளிப் பருவ நாஸ்டால்ஜிய பக்கங்களையும் இத்திரைப்படம் புரட்டியது. இத்திரைப்படத்தை சர்வானந்த், சமந்தாவை வைத்து தெலுங்கிலும் ரீமேக் செய்தார் பிரேம் குமார். `96' திரைப்படத்திற்குப் பிறகு இந்தாண்டு இவர் இயக்கத்தில் `மெய்யழகன்' திரைப்படம் வெளியாகியிருந்தது. உறவுகளின் முக்கியத்துவத்தைப் பேசும் இத்திரைப்படத்தில் மெய்யழகனாக கார்த்தி நடித்திருந்தார். கடந்த சில நாட்களாக `96' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டு வந்தது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அதே கதாபாத்திரங்களை வைத்து இந்த இரண்டாம் பாகம் நகரவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

Meiyazhagan Director Prem Kumar

தற்போது `96' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் பிரேம் குமார் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்தியப் பதிப்பின் பேட்டியில் பேசியிருக்கிறார். இது குறித்து அவர், ``நான் தற்போது `96' படத்தின் சீக்குவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். கொச்சியில் தங்கி இரண்டாம் பாகத்திற்கான எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இதை தாண்டி மற்றொரு திரைப்படத்தின் பணிகளிலும் இறங்கியிருக்கிறேன். அத்திரைப்படம் ஒரு சர்வைவல் டிராமா. இந்த இரண்டுப் லைன் அப்பில் என்னுடைய அடுத்த திரைப்படம் `96' படத்தின் சீக்குவல்தான்!'' எனக் கூறியிருக்கிறார்.

Vikatan Play

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

Nesippaya: "கப்பு முக்கியம்டா தம்பி..." - ஹீரோவாக அறிமுகமாகும் ஆகாஷிற்கு அண்ணன் அதர்வா வாழ்த்து

நடிகர் அதர்வா தம்பி ஆகாஷின் 'நேசிப்பாயா' படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உர... மேலும் பார்க்க

What to watch on Theatre and OTT: பயாஸ்கோப், சீசா, Marco - இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

பயாஸ்கோப் (தமிழ்)பயாஸ்கோப்சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்தியராஜ், சேரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பயாஸ்கோப்'. சினிமா பற்றி அறிமுகம் இல்லாத கிராமத்தினர் ஒன்று கூடி ஒரு சினிமா எ... மேலும் பார்க்க

Nesippaya: "இளையராஜாவின் குணம்.. நா.முத்துக்குமார் காம்போ.." - யுவன் குறித்து சிவகார்த்திகேயன்

'நேசிப்பாயா' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் யுவன் சங்கர் ராஜா குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.விஷ்ணுவர்தன் இயக்கத்தில், நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்ற... மேலும் பார்க்க

Nesippaya: "விஜய் டிவில ரூ.4500 சம்பளம் வாங்குனப்ப என் மாமனார்..." - சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்

'நேசிப்பாயா' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள... மேலும் பார்க்க