செய்திகள் :

Adhira: `இது PVCU'; டோலிவுட்டின் சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் - அசுரனாக எஸ்.ஜே சூர்யா!

post image

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் `ஹனுமான்' திரைப்படம் கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்து பெரும் வெற்றியைப் பெற்றது.

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புராணங்களை அடிப்படையாக வைத்து ஒரு சூப்பர் யுனிவர்ஸை கட்டமைத்திட முடிவு செய்தார் பிரசாந்த் வர்மா.

இந்த யுனிவர்ஸின் அடுத்தடுத்த திரைப்படங்களும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டன.

Prashanth Verma
Prashanth Verma

பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து ஆதிரா', ஜெய் ஹனுமான்', பாலைய்யாவின் மகன் நடிக்கும் படம் என அடுத்தடுத்து லைன் அப்களும் வைத்திருக்கிறார்கள்.

இவற்றில் `ஆதிரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.

அந்த போஸ்டரும் இப்போது சமூக வலைதளப் பக்கங்களில் கவனம் ஈர்த்திருக்கிறது. தயாரிப்பாளர் கல்யாணி தாசரி அறிமுக நடிகராக படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதனைத் தாண்டி வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்திருக்கிறார். புராணங்களை மையப்படுத்திய இந்த யுனிவர்ஸ் படைப்பில் எஸ்.ஜே. சூர்யா அசுரனாக நடித்திருக்கிறார். இந்தப் படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது.

Adhira Movie Poster
Adhira Movie Poster

`ஹனுமான்' வெற்றிக்குப் பிறகு மிகவும் பிஸியான இயக்குநராக சுற்றி வருகிறார் பிரசாந்த் வர்மா.

இந்தப் படத்தையும் முதலில் பிரசாந்த் வர்மாதான் இயக்கவிருந்தார்.

அவருடைய மற்ற பட கமிட்மென்ட் காரணங்களால் இப்படத்தை இயக்குநர் ஷரண் கோப்பிஷெட்டி இயக்கியிருக்கிறார்.

OG: மேடையிலேயே வாளை சுழற்றிய பவன் கல்யாண்; சில நொடிகளில் சுதாரித்த பவுண்ஸர்! - வைரல் வீடியோ

நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு' எதிர்பார்த்த வெற்றியை தராததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நட... மேலும் பார்க்க

OG: ரூ.1,29,999-க்கு விற்கப்பட்ட ஒரு டிக்கெட்; பவன் கல்யாண் ரசிகரின் 'அதிர்ச்சி' சம்பவம்

நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் `ஹரிஹர வீரமல்லு' எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதனால் பவன் கல்யாணின், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுஜித் இயக்... மேலும் பார்க்க

Kalki 2898 AD படத்திலிருந்து தீபிகா படுகோனே நீக்கம்: காரணம் என்ன?

கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கல்கி 2898 ஏ.டி. பிரபாஸ் நடித்த இந்த படத்தில், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, அன்னா பென், திஷா படானி, கமல் ஹாசன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்த... மேலும் பார்க்க

Anushka: "அருந்ததிக்குப் பிறகு வானம் படக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள்" - அனுஷ்கா

இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் விக்ரம் பிரபு, அனுஷ்கா ஆகியோர் நடித்திருக்கும் 'காட்டி' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இத்திரைப்படத்திற்காக அனுஷ்கா அளித்த நேர்காணலில் தன்னுடைய தொடக்கக் கால... மேலும் பார்க்க

Mirai: "மதம் சார்ந்த படங்களிலேயே நடிக்கிறீர்களே?" - பத்திரிகையாளர்கள் கேள்விக்கு தேஜா சஜ்ஜா பதில்

தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் 'மிராய்'. பான் இந்தியா மூவியாக உருவாகி இருக்கும் இந்தப் படத்... மேலும் பார்க்க

Balayya: "பாலய்யா பன்ச், POSITIVITY" - சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த பாலய்யா; வாழ்த்திய ரஜினி!

தெலுங்குத் திரைப்பட உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கும் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலய்யா), தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு படத்திற்கான விரு... மேலும் பார்க்க