செய்திகள் :

ADMK: ஹரித்வாருக்கு செல்வதாகச் சொன்ன செங்கோட்டையன் - அமித் ஷாவின் வீட்டில் சந்திப்பு!? நடந்தது என்ன?

post image

அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளை பறித்து பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பலரின் பதவியும் பறிக்கப்பட்டது.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் இப்படியான நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இதனால் என்ன விளைவு வரும் என்பதை போகப் போகத் தெரியும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோவை சென்ற அவர் அங்கிருந்து அவரின் ஆதரவாளர்களையும் சிலத் தலைவர்களையும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான் ஹரித்வாரில் உள்ள கோயிலுக்குச் செல்கிறேன். பா.ஜ.க தலைவர்கள் யாரையும் சந்திக்க புதுடெல்லி செல்லவில்லை” என கூறினார்.

9-ம் தேதி செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை. “கலங்க வேண்டாம்; நியாயமான கோரிக்கையைத் தான் வைத்துள்ளீர்கள்” என தொண்டர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.

“பா.ஜ.க தலைவர்களையல்ல, ராமரை சந்திக்கச் செல்கிறேன். கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தால் மனம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும்,” என்றார்.

ஆனால், அவர் செல்லும்போதே டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியானது.

அமித் ஷா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்

நேற்று டெல்லி சென்ற செங்கோட்டையன், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரின் இல்லத்தில் சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசியதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில், தமிழக அரசியல் நிலவரம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு முயற்சியில் ஏற்பட்ட அதிர்வுகள் குறித்து செங்கோட்டையனிடம் அமித் ஷா விரிவாக கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

VP Election: `15 ஓட்டு; கணித ரீதியான வெற்றி; எதிர்க்கட்சிகள் கூட்டணி பலப்பட்டிருக்கிறது' – காங்கிரஸ்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஜக்தீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.இதனால், மாநி... மேலும் பார்க்க

Exclusive: ``வைகோ 100 முறை தாயகத்தில் சத்தியம் செய்தார்; காப்பாற்றவில்லை'' - மல்லை சத்யா சொல்வதென்ன?

ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் சில காலமாகவே கருத்து மோதல் நிலவி வந்தது. இதற்கிடையில், மல்லை சத்யா கட்சியிலிரு... மேலும் பார்க்க

``எச்சரிக்கை, கவனமாக கேளுங்கள்; காசாவில் இருந்து உடனே கிளம்புங்கள்'' - தாக்குதலை அதிகரித்த நெதன்யாகு

நேற்று இஸ்ரேல் ஜெரூசேலத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.கூட்டமான பேருந்தில் ஏறிய இரண்டு பாலஸ்தீனிய தீவிரவாதிகள் தூப்பாக்கி சூடு நடத்தியதாக தகவவல் வெளியானது. இந்தச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 6 ப... மேலும் பார்க்க

``செங்கோட்டையன் உடம்பில் மட்டும்தான் அதிமுக ரத்தம் ஓடுகிறதா?'' - தளவாய் சுந்தரம் கேள்வி

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சொந்த சுற்றுப்பயணம். தமிழகத்திற்கு எந்த நிதியு... மேலும் பார்க்க

``மதுரை விமான நிலைய பெயர்; மக்கள் நலனை மறந்து EPS பேசுகிறார்'' - கிருஷ்ணசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்... மேலும் பார்க்க

``அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம்; ஆனால்'' - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், நிலகோட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி தொகுதிகளில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்தார் மக்கள... மேலும் பார்க்க