செய்திகள் :

AI-யின் தாக்கமா? 4 முறை வேலையை இழந்த மென்பொருள் பொறியாளர் - என்ன காரணம் கூறுகிறார்?

post image

சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 59 வயதான மார்க் க்ரிகுயர் என்பவர் 28 ஆண்டுகளாக மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த 18 ஆண்டுகளில் நான்கு முறை அவர் தனது வேலையை இழந்துள்ளார். சமீபத்தில், வால்மார்ட் குளோபல் டெக் நிறுவனம் 1,500 பணியிடங்களைக் குறைத்தபோது, அவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப கால ஆர்வம்

மார்க்குக்கு 10 வயதாகும்போதே கணினி மீது ஆர்வம் தொடங்கியிருக்கிறது. புரோகிராம்களின் பிழைகளைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட அவர், 28 ஆண்டுகளுக்கு முன்பு மென்பொருள் துறையில் பணியைத் தொடங்கியிருக்கிறார். 2008-ல் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் தனது முதல் வேலை இழப்பைச் சந்தித்திருக்கிறார். இதுபோன்று நான்கு முறை வெவ்வேறு நிறுவனத்தில் வேலையை இழந்திருக்கிறார்.

AI-யின் பங்கு

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆனால், வேலை இழப்புகளுக்கு AI முக்கிய காரணம் இல்லை என மார்க் கருதுகிறார். AI வரும் காலங்களில் அதனையும் மாற்றும் என அவர் எச்சரிக்கிறார்.

வேலை இழப்பின் காரணங்கள்

”நிறுவனங்கள் வேகமாக அதிகமானவர்களைப் பணியமர்த்துகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்களைவிட, அதிகப்படியான பணியமர்த்தல் மற்றும் செலவு குறைப்பே வேலை இழப்புக்கு முக்கிய காரணங்கள்” என அவர் கூறியிருக்கிறார்.

தொழில்நுட்பத் துறையில் அனுபவமிக்கவர்களும் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.

சுந்தர் பிச்சை – முகேஷ் அம்பானி கூட்டணி: இந்தியாவில் அறிமுகமாகிறது Reliance Intelligence!

AI தொழில்நுட்ப ரேஸில் முன்னணி டெக் நிறுவனங்கள்செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ரேஸில் இன்று அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் இறங்கியுள்ளன.மெட்டா, ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்... மேலும் பார்க்க

England: குற்றங்கள் நடப்பதை முன்பே தடுக்க AI; இங்கிலாந்து அரசின் புதிய முன்னெடுப்பு!

குற்றம் நடந்த பிறகு தண்டனை கொடுப்பதை விட, குற்றம் நடக்காமல் தடுப்பதே சிறந்த தீர்வு என்று கூறப்படுவது உண்டு.இந்த நிலையில், இங்கிலாந்து அரசு தற்போது செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) மூலம... மேலும் பார்க்க

Pregnancy Robot: பெண்ணே வேண்டாம்; சீனாவின் குழந்தை பெற்றுக்கொடுக்கும் ரோபோட் - 2026-ல் வருகிறதா?

இன்னும் சில ஆண்டுகளில் கர்ப்பமாகக் கூடிய மனித உருவ ரோபோக்களை அறிமுகப்படுத்த உள்ளது சீனா. உடலுறவு மூலம் அல்ல, குழந்தையை சுமக்கக்கூடிய செயற்கையான கருப்பையைக் கொண்டிருப்பதன் மூலம்.சீனாவின் குவாங்சோ நகரில... மேலும் பார்க்க

Hike செயலி ஏன் தோல்வியடைந்தது? நிறுவனர் வெளியிட்ட முக்கிய தகவல்

இந்தியாவில் பிரபலமாக இருந்த ஹைக் (Hike) செயலி ஏன் மூடப்பட்டது என்பது குறித்து அதன் நிறுவனர் கவல் கூக் மனம் திறந்து பேசியிருக்கிறார். வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக இந்திய இளைஞர்களிடையே பெரும் புகழ் பெற்றிருந... மேலும் பார்க்க

Aravind Srinivas: 'Google Chrome'-யை விலை பேசும் தமிழ் பையன்; யார் இந்த அரவிந்த் ஶ்ரீனிவாஸ்?

இணையதள தேடுதலில் 'Mozilla Firefox, Microsoft Edge, Safari' எனப் பல 'Browser'கள் இருந்தாலும் பல ஆண்டுகளாக 3 பில்லயன் பயன்பாட்டாளர்களைக் கொண்டு முன்னணியில் கோலோச்சி வருகிறது கூகுள் குரோம் (Google Chrome... மேலும் பார்க்க

Open AI: பணியாளர்களுக்கு பெரிய அளவிலான வைப்பு போனஸ்; கவனம் பெறும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முடிவு!

ஓபன்ஏஐ நிறுவனம், தனது மூன்றில் ஒரு பங்கை பணியாளர்களுக்கு பெரிய அளவிலான வைப்பு போனஸாக வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தி வெர்ஜ் அறிக்கையின்படி, ஓபன்ஏஐ தனது தேவைப்படும் ஊழியர்களுக்கு "சிறப்பு ஒரு ... மேலும் பார்க்க