'OPS-Nainar' யுத்தம், குளிர் காயும் Stalin & Annamalai! | Elangovan Explains
AI வேலைகளுக்குக் கோடிகளில் அள்ளித்தரும் ஆப்பிள் நிறுவனம்; என்னனென்ன வேலை, எவ்வளவு சம்பளம் தெரியுமா?
மெட்டா, ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானோரை வேலையிருந்து தூக்கிவிட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த (AI) துறைகளில் அதிமானவர்களை பணியமர்த்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
அவ்வகையில் ஆப்பிள் நிறுவனம் AI தொழில்நுட்பத்தில் அதிமான முதலீடுகளை போட்டு 'AI assistant, Apple Intelligence, Siri (LLM‑powered AI upgrade), AI‑based Apple Music playlists, Apple Intelligence API' உள்ளிட்ட பல புராஜெக்ட்டுகளைச் செய்துவருகிறது. 2026 ஆம் ஆண்டு AI தொடர்பான மிகப்பெரிய அறிவிப்பை ஆப்பிள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் செயற்கை நுண்ணறிவில் சிறந்து விளங்குபவர்களைப் பணியமர்த்தும் பணியில் இறங்கியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்தப் பணிகளுக்கான வருட சம்பளம் குறித்தத் தகவல்களை 'business insider' என்ற பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, "Machine Learning Engineer - ரூ 1.19 கோடி – ரூ 2.59 கோடி
Machine Learning Researcher - ரூ 94 கோடி - 2 கோடி
Data Scientist - ரூ 87 லட்சம் - ரூ 2 கோடி
Software Development Engineer (Applications) - ரூ.1 கோடி - ரூ. 3 கோடி
Human Interface Designer - ரூ.1 கோடி - ரூ. 3 கோடி
AR/VR Software Development - ரூ. 2 கோடி - ரூ.2 கோடி
Software Engineering Manager - ரூ. 1 கோடி - ரூ. 3 கோடி
RF/Analog/Mixed Signal Engineer - ரூ. 1 கோடி - ரூ. 2 கோடி
Design Verification Engineer - ரூ. 85 லட்சம் - ரூ. 2 கோடி" எனத் தலைச் சுற்ற வைக்கும் சம்பளம் தொடர்பான தகவல்கள் கசிந்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs