பூம்புகார் அருகே கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
Ajith Kumar: 13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய அஜித் குமார்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
சென்னையைச் சேர்ந்த 13 வயது ரேஸர் ஜேடன் இமானுவேலிடம் நடிகர் அஜித் குமார் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.
சமீப காலமாக அவர் பல்வேறு சர்வதேச கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
அந்த வகையில் துபாய் நடைபெற்ற கார் ரேஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கலில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்துகொண்டிருந்தார்.
தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் 13 வயது ரேஸர் ஜேடன் இமானுவேலிடம் அஜித்குமார் ஆட்டோகிராப் வாங்கி இருக்கிறார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
சிறுவன் ஜேடன் இமானுவேல் சென்னையைச் சேர்ந்தவர். இவர் ஜெர்மனியில் நடைபெற்ற பைக் ரேஸ் MiniGP பிரிவில் பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
அடுத்ததாக ஸ்பெயினில் நடக்கவுள்ள MiniGP World 2025 பைக் ரேஸின் இறுதிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...