செய்திகள் :

Ajithkumar:``அஜித் சார் கைகொடுத்துத் தூக்கிவிட்ட எத்தனையோ பேர்களில்...''- நெகிழும் மகிழ் திருமேனி

post image
மோகன் லால் நடித்துள்ள `எல்2; எம்புரான்' படம் மார்ச் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

ப்ரித்விராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் தயாராகியிருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று கொச்சியில் நடைபெற்று வருகிறது. படக்குழு உட்பட மம்முட்டி, இயக்குநர் மகிழ் திருமேனி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி, ``நான் மோகன் லால் சார் படத்தின் விழாவில் இருப்பது எனக்கு சர்ரியல் மொமன்ட்தான். நான் அவருடைய படங்களைப் பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். என்னைப் போலவே இங்கு பலரும் அவருடைய சினிமாக்களை வியந்துப் பார்த்துதான் வளர்ந்திருக்கிறோம். அவரைத் தொடர்ந்து பார்க்கும் நமக்கு வயதாகிக்கொண்டே செல்கிறது. அவர் இன்னும் இளமையாகிக் கொண்டே போகிறார். மலையாள சினிமாவின் இத்தனை ஆளுமைகள் பங்குபெறும் விழாவில் நான் இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.

Magizh Thirumeni

தமிழ் சினிமாவுக்கும் மலையாள சினிமாவுக்கும் ஒன்றுபட்ட வரலாறுகள் இருக்கின்றன. இரண்டும் ஒன்றாகத்தான் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. ப்ரித்விராஜ் என்னைப் பற்றிய உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி. நான் அந்த வார்த்தைகளுக்குத் தகுதியானவனா என்பது தெரியவில்லை. அதற்கு தகுதியுடைவனாக நான் மாறுவதற்கு முயற்சி செய்கிறேன். உங்களுடைய கடின உழைப்பு அத்தனையும் டீசரில் வெளிப்பட்டிருக்கிறது. லூசிஃபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற திரைப்படம். மலையாளத்தில் மட்டுமல்ல அத்தனை பகுதிகளிலும் வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, மற்ற மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது. இப்போது இந்த இரண்டாம் பாகத்துக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த மேடையில் பத்ம பூஷன் அஜித் சார் பற்றி பேச வேண்டும். அஜித் சார் கைகொடுத்து தூக்கிவிட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன் எனச் செல்லிக் கொள்வதில் பெருமைகொள்கிறேன். " என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Kudumbasthan: ``பெருளாதார ரீதியாக அந்தப் படம் ஒரு படி மேல ஏத்திவிட்டிருக்கு!'' - ஜென்சன் பேட்டி

மணிகண்டன் நடிப்பில் வெளியாகியிருக்கிற `குடும்பஸ்தன்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.குலுங்கி சிரிக்க வைக்கிறான் இந்த `குடும்பஸ்தன்' என்பதுதான் பலரின் விமர்சனமாக இருக்கிறது. அந்தக் கா... மேலும் பார்க்க

Nithya Menen: "தேன்மொழி பூங்கொடி மைண்டு ஃபுல்லா நீயடி..." - நித்யா க்ளிக்ஸ் | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

Samantha: ``இதுதான் எனது கடைசி படம் என்று யோசிக்கும் அளவிற்கு..'' -சமந்தா சொல்வதென்ன?

2010-ம் ஆண்டு தமிழ் வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த 'குஷி' படம் ஓரளவிற்க... மேலும் பார்க்க

Shah Rukh Khan: `கிங்' - ஷாருக் கானுடன் இரண்டாது முறையாக இணையும் இயக்குநர்

ஷாருக் கானுக்கு ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு கடந்த 2023-ம் ஆண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாகின.`பதான்', `ஜவான்', `டங்கி' என வெளியான மூன்று படங்களுக் ஹிட்டடித்து வசூலை அள்ளின. இதன் பிறகு, கடந்த 202... மேலும் பார்க்க

STR Exclusive: `இணையும் புதுக்கூட்டணி' - சிலம்பரசனின் மூன்று அறிவிப்புகள் என்னென்ன?

வருகிற பிப்ரவரி 3ம் தேதி அன்று சிலம்பரசனின் பிறந்த நாள் வருகிறது. அன்று அதிரடியான மூன்று அறிவிப்புகள் வெளியாகும் என அவரே அறிவித்துள்ளார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' சிலம்பரசன் ... மேலும் பார்க்க

`ஏமாற்றிவிட்டார்' - புகாரளித்த நடிகை; `அந்தத் தப்ப செய்யாதீங்க' கலங்கும்`காதல்' சுகுமார்

காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிப் பழகிவிட்டு, தற்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என நடிகர் 'காதல்' சுகுமார் மீது போலீசில் புகார் தந்திருக்கிற துணை நடிகை ஒருவர், தன்னிடமிருந்து ... மேலும் பார்க்க