செய்திகள் :

Samantha: ``இதுதான் எனது கடைசி படம் என்று யோசிக்கும் அளவிற்கு..'' -சமந்தா சொல்வதென்ன?

post image
2010-ம் ஆண்டு தமிழ் வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த 'குஷி' படம் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான 'Citadel'-ல் நடித்திருந்தார். அந்தத் தொடரில் சமந்தா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் படங்களின் தேர்வு குறித்து பேசியிருக்கிறார்.

சமந்தா
சமந்தா

"நிறைய படங்கள் நடிப்பது எளிமையானதுதான். ஆனால் இதுதான் எனது கடைசி படம் என்று என்னை யோசிக்க வைக்கும் அளவுக்கான படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முக்கியமாக அந்தக் கட்டத்தில்தான் நான் இருப்பதாக உணர்கிறேன். இனிமேல் ஒரு நடிகையாக சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே விரும்புகிறேன்.

சமந்தா
சமந்தா

படங்களைத் தேர்ந்தெடுப்பதில் பல விதமாக யோசித்தே முடிவெடுப்பேன். எனக்கு மன நிறைவு தராத படங்களில் எப்போதும் நான் நடிப்பதே கிடையாது. “ஃபேமிலிமேன் 2, 'Citadel'-ல் நடித்ததன் மூலம் தன்னை ஒரு நடிகையாக நிரூபிக்க முடிந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Kudumbasthan: "யூடியூப்பர்களை சாதாரணமாக நினைக்காதீங்க..." - 'நக்கலைட்ஸ்' பிரசன்னா பாலசந்திரன்

நக்கலைட்ஸ் யூட்யூப் சானலின் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தரராஜன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குடும்பஸ்தன்'.கல்யாண வாழ்க்கைய... மேலும் பார்க்க

Parasakthi: `எதிர்நீச்சல் டு பராசக்தி' - சிவகார்த்திகேயனும் ரெட்ரோ தலைப்புகளும் - ஒரு பார்வை

சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்.இப்படத்திற்கு `பராசக்தி' என தலைப்பு வைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது இப்படத்தின் தயாரிப்பு நிறுவமான `டான் பிக்சர்ஸ்' . படத்தில் இது... மேலும் பார்க்க

'மதகஜராஜா' வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் பழைய படங்கள்; ஜி.தனஞ்செயன் பட்டியலிடும் படங்கள் என்னென்ன?

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்த 'மதகஜராஜா' படத்தின் வெற்றி, தமிழ் சினிமாவில் புது டிரெண்ட்டை துவக்கியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இப்படம், பல்வேறு பிரச்னைகளால் கிடப்பில் ப... மேலும் பார்க்க

Kishen das: 'முதல் நீ முடிவும் நீ...' - பட ரிலீஸ் அன்றே தனது தோழியைக் கரம் பிடித்த கிஷன் தாஸ்!

`முதல் நீ முடிவும் நீ' திரைப்படத்தின் மூலம் நமக்கு பரிச்சயமானவர் நடிகர் கிஷன் தாஸ்.இதைத் தாண்டி அவர் `நேர்கொண்ட பார்வை', `சிங்க்', `சிங்கப்பூர் சலூன்' போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடி... மேலும் பார்க்க