செய்திகள் :

Alien: K2-18b கிரகத்தில் உயிர்கள் நிறைந்த கடல்; அறிவியலாளர்கள் முன்வைக்கும் முக்கிய ஆதாரங்கள் என்ன?

post image

ஏலியன்கள் இனியும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் வரும் பூதங்கள் அல்ல. பூமியிலிருந்து தொலை தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்பதற்கான வலுவான ஆதாரங்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏலியன்கள் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கு, 'இருக்கிறது அல்லது இருக்கலாம்' என நாம் பதில் சொல்ல முக்கிய காரணம், இந்த பிரபஞ்சத்தின் பிரமாண்டம்தான்.

அதுதான் நம்மை இன்னும் இன்னும் ஆழமாக விண்வெளியில் தேடிப்பார்க்க வைக்கிறது. அப்படி கண்டறியப்பட்ட கிரகம்தான் K2-18b.

K2-18b
K2-18b

இந்த கிரகம் பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தூரத்தில் சிம்ம நட்சத்திரக் கூட்டத்தில் உள்ளது.

இந்த கிரகத்தில் உள்ள சில மூலக்கூறுகள் பூமியில் இருக்கக் கூடியவை. அதுவும் எளிமையான உயிரினங்களால் மட்டுமே உருவாக்க முடியும் வேதியல் சேர்மங்கள்.

இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு தலா 1 விழுக்காடு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். ஆரம்பத்தில் நீராவி இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் 0.1%க்கும் குறைவாகவே உள்ளதாகக் கூறுகின்றனர்.

இவைத் தவிர டைமெத்தில் சல்பைடு (DMS) மற்றும் டைமெத்தில் டைசல்பைடு (DMDS) ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவைதான் உயிர்கள் இருப்பதற்கான சாட்சியமாகப் பார்க்கப்படுகிறது.

நாம் படத்தில் காண்பது போன்ற, அறிவாற்றல் மிக்க ஏலியன்கள் இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் நிச்சயமாக அங்கே உயிர்கள் இருக்கின்றன என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கிரகத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி மூலம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் கண்டறிந்துள்ளனர்.

 முனைவர் நிக்கு மதுசுதன்
முனைவர் நிக்கு மதுசுதன்

இந்த கிரகத்தில் வெப்பமான, உயிர்கள் நிறைந்த கடல் இருப்பதாக இந்த திட்டத்தை வழிநடத்திய முனைவர் நிக்கு மதுசுதன் தெரிவித்துள்ளார்.

உயிர் வாழ ஓரளவு தகுதியான கிரகங்கள் கண்டறியப்பட்டிருந்தாலும், உயிர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதகற்கான அடையாளங்களை ஒரு கிரகத்தில் கண்டறிவது இதுவே முதன்முறை.

Alien இருக்கிறதா?

"பிரபஞ்சத்தில் பூமியில் உள்ள உயிர்கள் மட்டும் தனியாக இருக்கிறதா என்ற அடிப்படை கேள்விக்கு நாம் விடைகண்டறியும் தருணம் இதுவாக இருக்கலாம்" என மதுசுதன் தெரிவித்துள்ளார்.

நியு யார்க் டைம்ஸ் தளத்தில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கிரக விஞ்ஞானி ஸ்டீபன் ஷ்மிட், இது ஒரு குறிப்புதான். ஆனால், இதை வைத்து அந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்வதாகத் தெரிவித்துவிட முடியாது எனக் கூறியுள்ளார்.

K2-18b கிரகத்தில் உயிர்கள் இருப்பதை உறுதி செய்ய இன்னும் ஆழமான ஆராய்ச்சிகள் தேவை என மதுசுதனின் குழுவினரும் தெரிவித்துள்ளனர். "முன்கூட்டியே ஏலியன்கள் இருப்பதாகக் கூறுவதில் யாருக்கும் லாபமில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

விமானம் பறக்கும் போது மொபைலை Airplane mode-ல் வைக்க சொல்வது ஏன்? காரணம் இதுதான்!

இன்றைக்கு மற்ற போக்குவரத்தை போல விமான போக்குவரத்தையும் மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு விமான நிறுவனங்களும் பல பாதுகாப்பு விதிகளை உள்ளடக்கியுள்ளன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்... மேலும் பார்க்க

"12,500 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்குத் திரும்பிய Dire Wolf" - அழிந்த உயிரினத்தை மீட்டது எப்படி?

12,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஓநாய் இனம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். முதன்முறையாக வெற்றிகரமாக மறு உருவாக்கம் அடைந்த உயிரினம் இதுதான் என்கின்றனர். அமெரிக்கா... மேலும் பார்க்க

தும்மலின் போது கண்களை திறந்து வைக்க முடியாதா?! ஏன் தெரியுமா?

தும்மல் என்பது நுரையீரலில் இருந்து மூக்கு வழியாக காற்றை வெளியேற்றும் ஒரு செயல்முறையாகும்.பொதுவாக கண்களை மூடி கொண்டு தான் தும்மல் ஏற்படும். ஏன் கண்களைத் திறக்கக் கொண்டு தும்மல் முடியவில்லை எப்போதாவது ய... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி - இதற்கு பின்னால் இவ்வளவு காரணம் இருக்கா?

வீடுகளில் பெரும்பாலும் அரளிச் செடியை அதன் விஷத்தன்மை காரணமாக வளர்ப்பது இல்லை. ஆனால் நெடுஞ்சாலைகளில் செவ்வரளிச் செடி அதிகம் இருப்பதை பார்த்திருப்போம். பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலும் அதனை பராமரிப்பது க... மேலும் பார்க்க

`இது புகையல்ல...' - விமானங்களுக்குப் பின்னால் வெள்ளை நிற கோடுகள் எப்படி உருவாகின்றன தெரியுமா?

வானத்தில் விமானங்கள் பறந்து செல்லும்போது அதற்கு பின்னால் வெள்ளை கோடுகள் தோன்றும், அதனை பலரும் விமானத்திலிருந்து வரும் புகை என்று நினைத்திருப்போம். ஆனால் அது உண்மையில் புகையல்ல...பொதுவாக ஜெட் விமானங்கள... மேலும் பார்க்க

விமானத்தின் ஜன்னலில் இருக்கும் சிறிய துளை; எதற்காக இருக்கிறது தெரியுமா? - அறிவியல் காரணம் இதுதான்!

விமானத்தின் ஜன்னலில் ஒரு சிறிய துளை இருக்கும். இதற்கு பின்னால் இவ்வளவு பாதுகாப்பு காரணங்கள் இருக்கின்றன என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.ஒரு விமானம் புறப்பட்டு உயரத்தில் பறக்கும் போது காற்றின் அழ... மேலும் பார்க்க