மீண்டும் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 746 புள்ளிகளுடனும், நிஃப்டி 221 புள்ளிகளு...
Allu Arjun: நடிகர் அல்லு அர்ஜுனை விசாரித்து அனுப்பிய பாதுகாப்புப் படை வீரர் - வைரல் வீடியோ!
நடிகர் அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கும் 'AA22xA6' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் தீபிகா படுகோன், ரஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணால் தாக்கூர் போன்ற திரை நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். இந்த ஆண்டின் இறுதிக்குள், அல்லது அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் மும்பை விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனைக்குள்ளாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. மும்பை விமான நிலையத்தில் வெள்ளை டீ ஷர்ட்டுடன் உள் நுழையும் நடிகர் அல்லு அர்ஜுன், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) ஊழியர்களுடன் நின்று உரையாடுகிறார்.
Good & Responsible Gesture From #AlluArjun
— cinee worldd (@Cinee_Worldd) August 10, 2025
At the airport security check yesterday, Allu Arjun was requested by an officer for a standard face and ID verification. Without a hint of hesitation, he obliged — removing his face covering, presenting his ID, and cooperating fully… pic.twitter.com/8TvJqGt3Zs
பாதுகாப்புப் படை வீரர் அவரின் மாஸ்க்கை கழற்றச் சொல்கிறார். சில வினாடிகள் யோசித்துவிட்டு நடிகர் அல்லு அர்ஜுன் மாஸ்க், சன் கிளாஸை கழற்றுகிறார். அதற்குப் பிறகு அவர் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார். இந்த வீடியோவை பகிர்ந்தவர்கள், சிஐஎஸ்எஃப் வீரர்கள் மிகச் சரியாக ஒவ்வொருவரையும் கையாள்கிறார்கள் எனப் பாராட்டினர். மற்றொருபுறத்தில் என்னதான் நாடே புகழும் ஒரு நடிகராக இருந்தாலும், சட்டத்தின் முன் தன்னை ஒரு இந்தியராக, சாதாரண நபராக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஒத்துழைத்திருக்கிறார் நடிகர் என அவரின் ரசிகர்கள் அவரைப் புழந்துவருகிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...