F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?
Amitabh: "யோகா, துளசி, நெல்லிக்காய் ஜூஸ்" - 82 வயதில் அமிதாப் பச்சன் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது 82 வயதிலும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்து அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். அமிதாப் பச்சன் தற்போது படங்களில் நடித்து வருவதோடு, கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். பல பிராண்ட்களுக்கு விளம்பர தூதராகவும் இருக்கிறார்.
அமிதாப் பச்சன் தனது உடல் நலனிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். வயதுக்குத் தக்கபடி தனது உணவு முறையிலும் மாற்றம் செய்துள்ளார். அமிதாப் பச்சனின் உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் குறித்து பலர் ஆச்சரியம் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து அமிதாப் பச்சனின் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பயிற்சி கொடுத்து வரும் விருந்தா மேத்தா கூறுகையில், "அமிதாப் பச்சன் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். அமிதாப் பச்சனுக்கு உடற்பயிற்சி செய்ய நேரம் இருக்கும்போது நீங்களும் உடற்பயிற்சியைச் செய்யலாம். ஒன்று உங்களுக்கு நன்றாக இருந்தால் அதைச் செய்கிறீர்கள். அதேசமயம் அது உங்களுக்கு அசௌகரியமாக இருந்தால் அதனைச் செய்ய நேரம் இல்லை என்று சொல்லும் மனநிலைதான் மக்களிடம் இருக்கிறது. அமிதாப் பச்சக்கு நான் பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி தொடர்பாகப் பயிற்சி கொடுக்கிறேன். பயிற்சியின்போது ஆரம்பத்தில் மூச்சுப்பயிற்சியில் தொடங்குவோம். தொடர்ந்து பிராணாயாமம் மற்றும் அடிப்படை யோகா பயிற்சி தொடர்பானதாக இருக்கும்" என்றார்.
மற்றொரு பயிற்சியாளர் சிவோஹாம் இது குறித்துக் கூறுகையில், "சில நேரங்களில் அமிதாப் பச்சனிடம் இப்போது உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டாம் என்று சொல்வோம். ஆனால் அவர் உடற்பயிற்சிக்கு நேரம் எடுத்துக்கொள்வார். உடற்பயிற்சி முக்கியம் என்பதால் காலையாக இருந்தாலும், மாலையாக இருந்தாலும், அல்லது வேலையிலிருந்தாலும் உடற்பயிற்சிக்கு நேரம் எடுத்துச் செய்வார்'' என்றார்.
விருந்தா மேத்தா மற்றும் சிவோஹாம் ஆகியோர் பாலிவுட் பிரபலங்களுக்கு உடற்பயிற்சியாவார்களாக இருக்கின்றனர்.
உணவு விவகாரத்திலும் அமிதாப்பச்சன் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறார். காலையில் சில துளசி இலைகளைச் சாப்பிடுகிறார். அதனைத் தொடர்ந்து காலை உணவாகப் புரத பாணம், பாதாம் அல்லது தேங்காய் தண்ணீர் குடிக்கிறார். இது தவிர நெல்லிக்காய் ஜூஸ், பேரீச்சம்பழம் மற்றும் சத்தான பருப்பு வகைகளை எடுத்துக்கொள்கிறார். உணவு முறை குறித்து ஒரு முறை பேசும்போது அமிதாப்பச்சன் கூறுகையில், ''நான் இளமையாக இருந்தபோது அனைத்தையும் சாப்பிடுவேன். ஆனால் இப்போது அசைவ உணவைக்கூடத் தவிர்த்துவிட்டேன். அதோடு இனிப்பு வகைகள், அரிசிச் சாதம் போன்றவற்றையும் கைவிட்டுவிட்டேன். மிகவும் குறைவான அளவு சர்க்கரை எடுத்துக்கொள்கிறேன். இதன் மூலம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதோடு உடலையும் பிட்டாக வைத்துக்கொள்ள முடிகிறது. உடல் பருமனையும் தவிர்க்க முடிகிறது" என்று தெரிவித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...