மும்பை: 85 பேருடன் சென்ற படகு விபத்துக்குள்ளானது! மாயமானோரை தேடும் பணி தீவிரம்
Anna: `கெத்தாக வந்த இசக்கி' - படிக்காத தங்கை; சுயதொழில் செய்ய வைக்க அண்ணன் செய்யும் பிளான்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `அண்ணா’ சீரியலில், சண்முகம் என்னும் கதாபாத்திரம் தன் தங்கைகளின் பிரச்னைகளை சரி செய்து அவர்களுக்காகவே வாழ்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கணவர் வீட்டில் மாமனார் செய்த கொடுமையால் அண்ணன் வீட்டிற்கு வந்திருக்கும் இசக்கியை மீண்டும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்ப பரணி முயற்சி செய்கிறார்.
மற்றொருபுறம் தங்கை சுயதொழில் செய்யத் தூண்ட வேண்டும் என்பதற்காக சண்முகம் இசக்கியை காயப்படுத்தி பேசுவது போல நடிக்கிறார். வீட்டுச் செலவுகள் பற்றி அவர் பேசும் போது, இசக்கி உடைந்துப் போகிறார்.
வீட்டில் அனைவரும் அவரவர் தேவைகளை அவர்களே பார்த்துக் கொள்கின்றனர், நம்மால் அது முடியவில்லை என குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறார். அண்ணன் வீடாக இருந்தாலும் சுயமாக வாழ வேண்டும் என்று முடிவு எடுக்கும் இசக்கி சுயதொழில் செய்ய நினைக்கிறார்.
மேலும் செலவுகளைப் பற்றி சண்முகம் பேசியதை மனதில் வைத்து, இசக்கி கண் கலங்கி தன் வளையல்களை கழட்டிக் கொடுக்கிறார். நடக்கும் இந்த சம்பவங்கள் பரணியை வருத்தமடைய செய்கிறது. தங்கைகளை காயப்படுத்த நினைக்காத சண்முகம் எதற்காக இப்படி பேசினார் என்று புரியாமல் தவிக்கிறார் பரணி.
மறுநாளே இசக்கி ஒரு மளிகை கடை வைக்கும் வேலையை செய்யத் தொடங்கிறார். ஒரு ஸ்கூட்டரில் கடைக்கு தேவையான மளிகைப் பொருட்களை எடுத்துக் கொண்டு கெத்தாக வந்திறங்குகிறார்.
சண்முகம் வெட்டுக்கிளியோடு நின்று பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்கூட்டரில் சென்ற பெண் யாரென தெரியாமல் பின் தொடர்கின்றனர். நம் கடைக்கு போட்டியாக யார் தொழில் தொடங்குகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே போகின்றனர். அது இசக்கி என்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
சண்முகத்திடம் இசக்கி மளிகை கடை வைக்க போவதாகச் சொல்கிறார். `உனக்குப் புடிச்சத செய்' என்று சொல்லும் சண்முகம் மனதிற்குள் நெகிழ்ந்து போகிறார். வீட்டில் மற்ற தங்கைகளும் இசக்கியின் முடிவைப் பாராட்டுகின்றனர்.
இசக்கியின் அண்ணியான பரணி இசக்கி சொந்தக் காலில் நிற்பது எண்ணி மகிழ்ச்சி அடைந்தாலும், அவர் கணவர் வீட்டிற்குச் சமாதானமாகிப் போவதில் சிக்கல் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்.
பரணியிடம் இதைச் சொல்லி வைகுண்டமும் வருந்துகிறார். ஆனால் பரணி படிக்காத இசக்கி தன்னால் முடிந்த ஒரு தொழிலைத் தொடங்க நினைக்கிறாரே என்று எண்ணி மகிழ்ச்சியடைகிறார்.
அதே சமயம் பரணிக்கு சண்முகம் ஏன் இசக்கியிடம் இப்படி நடந்து கொண்டார் என்னும் குழப்பம் இருக்கிறது. இதுகுறித்து இசக்கியிடம் பேசும்போது தான் உண்மைகளை தெரிந்து கொள்கிறார். வீட்டில் இருக்கும் அனைவர் முன்பும் இசக்கி தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக தான் சண்முகம் அப்படி செய்தார் என்பது தெரிய வருகிறது. பரணி நிம்மதியாகிறார்.
படிக்காத பெண் பிள்ளை சுயமாக நிற்க வேண்டும் என்பதற்காக ஒரு குடும்பமே ஆசைப்படும் காட்சிகள் ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. அண்ணன் சீரியல் பெண்களின் சுயமரியாதை, சுயத்தொழில், தன்னம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நகர்வதே இந்தப் பாராட்டுக்களுக்குக் காரணம்!