`இனி பொதுமக்களுக்கு இது கிடைக்காது!' - சத்தமே இல்லாமல் தேர்தல் விதிகளில் திருத்த...
Ashwin: "அஷ்வினை விட சிறந்த ஆல்ரவுண்டர் கிடைப்பார்; அதற்கு..." - ஜடேஜா சொல்வதென்ன?
இந்திய அணியின் முக்கிய வீரரான அஷ்வின் பிரிஸ்பேன் டெஸ்ட்டோடு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருந்தார். இந்நிலையில், அவரின் சக வீரரான ஜடேஜா, "அஷ்வின் விட்டுச் சென்றிருக்கு வெற்றிடம் நிரப்ப முடியாதது அல்ல" எனப் பேசியிருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா பேசியிருப்பதாவது, "அஷ்வினின் ஓய்வு முடிவு பற்றி கடைசி நிமிடத்தில்தான் எனக்குத் தெரிய வந்தது. அவர் பத்திரிகையாளர் சந்திப்புக்குச் செல்வதற்கு 5 நிமிடத்திற்கு முன்தான் ஓய்வுபெறப் போவதாகச் சொன்னார். அன்றைய நாள் முழுவதும் நாங்கள் ஒன்றாகத்தான் இருந்தோம். ஆனால், ஓய்வைப் பற்றி என்னிடம் சிறு செய்தியைக் கூட அவர் சொல்லவில்லை. களத்தில் என்னுடைய ஆலோசகர் அவர்தான். நாங்கள் இருவரும் போட்டியின் போக்கைப் பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம்.
நான் அதையெல்லாம் இனி தவறவிடுவேன். ஆனால், அஷ்வினை விட சிறந்த ஆல்ரவுண்டரும் பௌலரும் கிடைப்பார் என நாம் நம்ப வேண்டும். நிரப்ப முடியாத வெற்றிடத்தை யாரும் விட்டுச் செல்வதில்லை. இந்தியாவில் நிறைய திறமையாளர்கள் இருக்கிறார்கள். அஷ்வினின் ஓய்வு இளம் வீரர்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு" என்றார்
அஷ்வினின் ஓய்வைப் பற்றிய ஜடேஜாவின் கருத்து குறித்து உங்களின் எண்ணங்களை கமெண்ட் செய்யுங்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...