செய்திகள் :

Ashwin : மேற்கு மாம்பலத்தில் அஷ்வின் பெயரில் சாலை? - சென்னை மாநகராட்சி திட்டம்

post image

இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த அஷ்வினின் பெயரை சென்னையில் ஒரு சாலைக்கு வைப்பதற்கான நடைமுறைகள் சென்னை மாநகராட்சியில் நடந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

IND v NZ - Ravichandran Ashwin

அஷ்வின் இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கு மேல் ஆடிவிட்டார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆட சென்றிருந்த சமயத்தில் அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடிவிட்டார். 700+ சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டார். தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக ஆடிய மிகச்சிறந்த வீரர் என்றும் போற்றப்படுகிறார். சமீபத்தில் மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது. இப்போது, ஐ.பி.எல் இல் சென்னை அணிக்காக ஆடுவதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் அஷ்வின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மேற்கு மாம்பலத்தில் அஷ்வினின் வீடு அமைந்திருக்கும் தெருவுக்கு அஷ்வினின் பெயரை சூட்டுவதற்கான வேலைகள் சென்னை மாநகராட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

அஷ்வின் Carromball Media எனும் நிறுவனத்தை வைத்துள்ளார். அந்த நிறுவனம் சார்பில் ஆர்ய கவுடா தெரு அல்லது ராமகிருஷ்ணாபுரம் 1 வது தெருவுக்கு அஷ்வினின் பெயரை வைக்குமாறு மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கோரிக்கையை ஏற்று தீர்மானமாக நிறைவேற்ற சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருக்கிறது.

Ravichandran Ashwin

விரைவில் இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Virat Kohli: ஐபிஎல் வரலாற்றில் கோலிக்கு மற்றொரு கிரீடம்... இன்னும் 5 டீம்தான் மிச்சமிருக்கு!

ஐபிஎல் 18-வது சீசன், நடப்பு சாம்பியன் கொல்கத்தா vs பெங்களூரு ஆட்டத்துடன் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து கொல்கத்தா நிர்ணயித்த 172 என்ற இலக்கை, 17-வது ஓவர... மேலும் பார்க்க

KKR vs RCB : ``அந்த 2 பேராலதான் எல்லாம் நடந்துச்சு" - ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சி

18 வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தா அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்தே பெங்களூரு அணி வீழ்த்தியிருக்கிறது. பெங்களூரு சார்பில் கோலியும் சால்ட்டும் மிரட்டலான இன்னிங்... மேலும் பார்க்க

KKR vs RCB : `ஆளே மாறிட்டீங்களே RCB' - ஈடன் கார்டனில் கோலி & கோ செய்த OG சம்பவம்

சீசனின் முதல் போட்டியையே பட்டாசாக தொடங்கியிருக்கிறது ஆர்சிபி. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சொதப்பினால் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். பேட்டிங்கில் சலனமே இல்லாமல் ஆதிக்கமாக ஆடி திணறடிக்க... மேலும் பார்க்க

KKR vs RCB: ஸ்டம்ப் எகிறியும் சுனில் நரைன் `நாட் அவுட்' ஏன்? - காரணம் இதுதான்

ஐபிஎல் 18வது சீசன் இன்று தொடங்கியுள்ளது. 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்தத் தொடரின் தொடக்க விழா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் க... மேலும் பார்க்க