செய்திகள் :

KKR vs RCB : ``அந்த 2 பேராலதான் எல்லாம் நடந்துச்சு" - ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சி

post image

18 வது ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. கொல்கத்தா அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்தே பெங்களூரு அணி வீழ்த்தியிருக்கிறது. பெங்களூரு சார்பில் கோலியும் சால்ட்டும் மிரட்டலான இன்னிங்ஸை ஆடியிருந்தனர். கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியையே வெற்றியுடன் தொடங்கியிருக்கிறார் ரஜத் பட்டிதர். போட்டிக்குப் பிறகு ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சியாகவும் பேசியிருந்தார்.

Rajat Patidar

ரஜத் பட்டிதர் பேசியதாவது, "கேப்டனாக முதல் போட்டி என்பதால் கொஞ்சம் அழுத்தம் இருந்தது. ஆனால், இது எனக்கு நல்ல நாளாக அமைந்துவிட்டது. இப்படியான வெற்றிகளைப் பெற்றால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். எங்களுக்கு ரஸலின் விக்கெட் தேவைப்பட்டது. அதனால்தான் சுயாஷ் சர்மா ரன்களைக் கொடுத்திருந்தாலும் மீண்டும் அழைத்து வந்தேன். அவர் எங்களின் சிறந்த பௌலர். க்ரூணால் பாண்ட்யாவுக்கும் சுயாஷூக்கும்தான் எல்லா பாராட்டும் செல்லவேண்டும்.

13 ஓவர்களில் கொல்கத்தா 130 ரன்களை எடுத்திருந்தது. அந்த சமயத்தில் விக்கெட் எடுக்கும் உத்வேகத்துடன் வீசியிருந்தனர். கேப்டனாக விராட் கோலி போன்ற வீரர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பாகத்தான் இதைப் பார்க்கிறேன்.' என்றார்.

Noor Ahmad: `மஹி பாய் போன்ற ஒருவர் ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது.!’ - முதல்போட்டி குறித்து நூர் அகமது

ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக விளங்கும் சென்னை (CSK) vs மும்பை (MI) போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்க... மேலும் பார்க்க

Vignesh Puthur: `ஆலப்புழா டு தென்னாப்பிரிக்கா' - விக்னேஷை மும்பை அணி எப்படி கண்டுபிடித்தது தெரியுமா?

சேப்பாக்கத்தில் சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோற்றிருக்கிறது. ஆனாலும் மும்பை அணியின் விக்னேஷ் புத்தூர் எனும் இளம் வீரர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அறிமுகப் போட்டியிலேயே ருத்துராஜ... மேலும் பார்க்க

Ruturaj Gaikwad: ``அணியின் நலனுக்காகதான் அதைச் செய்தேன்!"- தெளிவுப்படுத்தும் ருத்துராஜ்

சேப்பாக்கத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சென்னை சார்பில் ருத்துராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அசத்தியிருந்தார். மும்பை அணி தோற... மேலும் பார்க்க

Vignesh Putur: `ஆட்டோ டிரைவரின் மகன் டு MI நட்சத்திரம்' -CSK வீரர்களுக்கு பயம் காட்டியவனின் கதை

ஐபிஎல் 2025ன் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. மும்பை அணியின் தோல்வியைக் கடந்து, தோனியின் என்ட்ரியைத் தாண்டி அனைவரது கவனத்தையும் ஈர... மேலும் பார்க்க

CSK vs MI : `விக்னேஷ் புத்தூர் எங்களின் பெருமைமிகு கண்டுபிடிப்பு' - சூர்யகுமார் நெகிழ்ச்சி

சேப்பாக்கத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. சென்னை சார்பில் ருத்துராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அசத்தியிருந்தார். மும்பை அணி தோற... மேலும் பார்க்க