சொன்னார்களே, செய்தார்களா? நாகை பிரச்னைகளை பட்டியலிட்ட விஜய்!
Balti: அனிரூத் உடன் போட்டியா? - சாய் அபயங்கர் சொன்ன பதில் என்ன?
மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் 'பல்டி'.
வளர்ந்துவரும் நட்சத்திரமான ஷேன் நிகாமின் 25வது திரைப்படம் இது. தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் சாந்தனு நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் சிம்புவின் திரைப்படத்திலும், சூர்யாவின் கருப்பு திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார் சாய் அபயங்கர்.
தவிர அல்லு அர்ஜுன் - அட்லி இணையின் பிரமாண்ட திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் உருவாகும் பென்ஸ் திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார்.
தற்போது அவர் இசையமைக்கும் 'பல்டி' திரைப்படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (செப்.18) சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட சாய் அபயங்கரிடம் 'அனிருத்துக்கும் உங்களுக்கும் போட்டி என்று விமர்சிக்கப்படுகிறதே?'என்று கேள்வி கேட்கப்படுகிறது.

அதற்குப் பதிலளித்த அவர், "அனிருத் நிறைய செய்துவிட்டார். நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். எங்களுக்குள் போட்டி என்றெல்லாம் எதுவும் கிடையாது.
உங்கள் அனைவரது ஆசிர்வாதத்துடன் இன்னும் நிறைய உழைக்க விரும்புகிறேன். நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். இதைத்தாண்டி போட்டி எதுவும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய அவர், “இப்போது இருக்கும் இயக்குநர்கள் அனைவரும் புதுமையை விரும்புகின்றனர். நான் புதிதாக எதையாவது முயற்சி செய்ய நினைத்தால் அதை மிகவும் விரும்புகின்றனர். அதை அனுமதிக்கின்றனர்.
ஆல்பத்தில் பணியாற்றுவதும், திரைப்படங்களில் பணியாற்றுவதும் ஒரே மாதிரி அனுபவமாகத்தான் இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...