செய்திகள் :

Bangladesh: `இஸ்கான் இந்து அமைப்பை தடை செய்யுங்கள்...' - வலுக்கும் போராட்டம் - காரணம் என்ன?!

post image

'இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை' என்று ஒரு பக்கமும், 'கிருஷ்ணர் அமைப்பை தடை செய்ய வேண்டும்' என்று இன்னொரு பக்கமும் வங்காளதேசம் மீண்டும் கலவர பூமியாக மாறியுள்ளது.

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதில் இருந்து, சிறுபான்மையினருக்கு எதிரான கோஷம் வங்காளதேசத்தில் சற்று அதிகமாக எழுந்து வருகிறது.

இந்த மாதம், வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர் இஸ்கான் அதாவது இந்து கடவுள் கிருஷ்ணர் சார்ந்த அமைப்பை குறிப்பிட்டு 'தீவிரவாத அமைப்பு' என்று பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால், இந்துக்கள் அதிகம் இருக்கும் ஹசாரி கலி என்ற பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே சண்டை வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர்.

ஷேக் ஹசீனா

அதன் பிறகு, இஸ்கானை குறிப்பிட்டு ஷேக் ஹசீனா கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது, தீவிரவாத அமைப்பு, இந்திய அரசின் ஏஜென்ட்டாக செயல்படுகிறது என்று ஒவ்வொன்றாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களில் பதிவுகள் பதிவாகி வந்தன. கூடுதலாக, ஆங்காங்கே இந்து கோயில் மற்றும் இந்துக்களின் மீதும் தாக்குதல்கள் நடந்து வந்தன.

இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து, இந்துக்கள் சார்பாக இஸ்கான் அர்ச்சகர் சின்மய் கிருஷ்ண தாஸ் பல போராட்டங்களை முன்னெடுத்தார். இதனால், கடந்த செவ்வாய் கிழமை, அவர் கைது செய்யப்பட்டார். இவரது கைதிற்கான காரணம் தெளிவாக சொல்லப்படவில்லை. ஆனால், அவர் வங்காளதேச கொடியை அவமதித்து காவி நிற கொடியை ஏற்றினார் என்று தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தகவல் சொல்லப்படுகிறது.

இவரது கைதினால் சிறுபான்மையினர் போராட்டத்தில் இறங்கினர். மேலும், இஸ்கான் அமைப்பை தடை செய்யுமாறு வழக்கறிஞர் ஒருவர் வங்காள தேச உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை வழங்கினார். இந்த மனுவிற்கு பதில் அளித்த வங்காள தேச அட்டார்னி ஜெனரல், "இஸ்கான் ஒரு மத அடிப்படைவாத அமைப்பு ஆகும். இதை அரசு தொடர்ந்து கவனித்து வருகிறது. இவர் ஒருவருடைய மனு 180 மில்லியன் வங்காளதேச மக்களின் ஆசையை பிரதிபலிக்கிறது. ஆனால், எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்பும் அரசியலமைப்பு சட்டத்தை பார்க்க வேண்டும்" என்று பதில் அளித்துள்ளார்.

சின்மாய் கிருஷ்ண தாஸ்

இந்த நிலையில், கிருஷ்ண தாஸ் கைதிற்கு நடந்த போராட்டத்தில் வங்காளதேச அரசு வழக்கறிஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி மோதலை அதிகப்படுத்தி உள்ளது. இதனால், 'இஸ்கானை தடை செய்ய வேண்டும்' என்ற குரல் தீவிரமடைந்துள்ளது. ஹேஸ்டேக்குகளும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

இஸ்கான் தடை கோரிக்கைக்கு இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஒருவேளை, இந்தத் தடையை நடைமுறைப்படுத்தி, இதுபோலவே சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்து வந்தால் இந்தியா - வங்காளதேச உறவு மிகவும் பாதிப்படையும் என்று அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

GCC மாமன்றக் கூட்டம்: பெருங்குடி பூங்கா திட்டம் ரத்து; செயல்படாத மெட்ரோ வாட்டர் நிர்வாகம்!- ஹைலைட்ஸ்

பெருநகர சென்னை மாநகராட்சியின் நவம்பர் மாத மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் இன்று (28-11-2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், ம... மேலும் பார்க்க

Lebanon: இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் செயல்படுத்தப்படுவது எப்படி?

ஓராண்டுக்கு மேலாக மோதிக் கொண்டிருந்த இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதன்படி, லெபனானில் படிப்படியாக அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது. அதே நேரம், `காஸாவிலும் போர்... மேலும் பார்க்க

'கூட்டணி கணக்கு; முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை தரப்பு' - அனல் தகிக்கும் கமலாலயம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் தமிழக பா.ஜ.க-வுக்குள் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்கள் வெடித்துக் கிளம்பியது. இந்தச்சூழலில்தான் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை விட்டு கொடுத்த ஷிண்டே; அமைச்சரவையில் சிவசேனாவுக்கு தாராளம் காட்டும் பாஜக

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான ஆளும் கட்சி கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் முதல்வர் விவகாரத்தில் தனது பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று ஏக்நாத் ஷிண்... மேலும் பார்க்க

`காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா இல்லையா?' - சர்ச்சையும் உண்மையும் | முழு அலசல்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளித்திருக்கும் சர்ச்சைக்குரிய பதிலால், `காவிரிப் படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? இல்லையா? தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் செல்லுமா? செல்லாதா? மத... மேலும் பார்க்க

``தரக்குறைவான புதிய பாம்பன் பாலம்; உயிர்களை அலட்சியப்படுத்தும் ரயில்வே" - எம்.பி சு.வெங்கடேசன்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - பாம்பன் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914-ல் தூக்குப்பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் பழுதடைந்தால், அதற்கு மாற்றாக ரூ.545 கோடி மதிப்பீட்டில் 101 தூண்களுடன் புதிய தூக்குப்... மேலும் பார்க்க