சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
Basics of Share Market 43: முதலீட்டில் எதனால் 'ரிஸ்க்' ஏற்படுகிறது?
பங்குச்சந்தையில் ரிஸ்க்... முதலீட்டில் ரிஸ்க் என்கிறீர்களே... எப்படி ரிஸ்க் வரும் என்று யோசித்திருக்கிறீர்களா? அந்த யோசிப்புக்கான பதில் இதோ...
"இப்போது நடந்துக்கொண்டிருக்கும் ரஷ்ய - உக்ரைன் போர், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் போன்ற உலகளவிலான நெருக்கடிகள், அவ்வப்போது நடக்கும் இயற்கைப் பேரிடர்கள், உலகளவிலான பொருளாதார நெருக்கடிகள் போன்று உலகம் சார்ந்த விஷயங்கள்,
அரசியல் அமைதியின்மை, வர்த்தகத் தடைகள், கச்சா எண்ணெய் விலையில் அதிக மாற்றம், தேர்தல்கள் அரசாங்க மாற்றம் போன்ற அரசியல் சார்ந்த மாற்றங்கள்,
நமக்கு தேவைப்படும் போது சட்டென பணம் எடுக்க முடியாதது,
நாம் முதலீடு செய்யும் நிறுவனத்தின் செயல்திறன்,
வட்டி விகித மாற்றங்கள்
ஆகியவற்றைப் பொறுத்து தான் நம் முதலீடுகளின் ரிஸ்க் அமைகிறது. இந்த ரிஸ்க் பங்குச்சந்தையில் மட்டுமல்ல எல்லாவிதமான முதலீடுகளிலும் இருக்கிறது. 'அப்போ முதலீடு செய்யாமலே இருக்கலாமே' என்றில்லாமல், ரிஸ்குகளை சமாளிப்பது போன்று ஸ்மார்ட்டாக முதலீடு செய்வது நல்லது. அதற்கான முறை தான் 'அசட் அலோகேசன்'. இதைப் பற்றி நாளை பார்க்கலாம்.