செய்திகள் :

BB Tamil 8: அன்று ஒரு பேட்டிக்காக சிறை வாசலில்..! - முத்துக்குமரன் வாழ்வில் சம்பவம் செய்த காலம்

post image

அதிசயங்களை நிகழ்த்தவல்லது காலம். சிலர் அந்த அதிசயங்களுக்காக நெடுநாள் காத்திருக்க வேண்டி வரலாம். சிலருக்குத் தூங்கி எழும் நேரத்திலும் அதிசயங்கள் அரங்கேறியிருக்கும்.

சுவாரஸ்யமான ஒரு அதிசயக் கதை பார்க்கலாமா?

இரண்டு வருடங்களுக்கு முன் புழல் மத்தியச் சிறையின் வாசலில் ஒரு பிரபலத்திடம் பேட்டி வாங்கக் காத்திருந்த போது, அந்த இளைஞன் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டான், வெகு விரைவிலேயே அதே பிரபலத்துடன் போட்டி போடுபவனாக தான் மாறப் போவதையும், அந்தப் பந்தயத்தில் ’பேசுவாரா’ எனக் காத்திருந்த அந்தப் பிரபலம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வெற்றி தனக்குக் கிட்டும் என்பதையும்.

முத்துக்குமரன்

2022 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் ஒரு மாலைப் பொழுதில் புழல் சிறையில் இருந்து வெளியில் வந்த அந்த செலிபிரிட்டியைப் பேட்டி எடுக்க ஒரு யூ டியூபராக சிறை வாசலில் காத்துக்கிடந்த அந்த இளைஞன், பிக்பாஸ் சீசன் 8 ன் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்.

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த அந்த செலிபிரிட்டி, மனைவி கொடுத்த புகாரில் கைதான அர்னவ்.

’அட, ஆமாங்க, அர்னவுக்கும் அவர் மனைவி திவ்யாவுக்குமிடையில் பிரச்னை உண்டாகி அர்னவ் கைது செய்யப்பட்டு சிறைக்குள் போன போது, முதல்ல திவ்யாகிட்ட பேட்டி எடுத்திருந்தார் முத்துக்குமரன். அந்தப் பேட்டியில் திவ்யா அர்னவ் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தாங்க, அந்தப் பேட்டி வெளிவந்த அடுத்த சில நாட்கள்ல அர்னவுக்கு ஜாமீன் கிடைச்சிடுச்சு.

அந்தச் சமயத்துல எல்லா மீடியாவிலயும் இவங்க பிரச்னை போய்க் கொண்டிருந்ததால், அர்னவைப் பேட்டி எடுக்க சில யூ டியூப் சேனல்கள் சிறை வாசலுக்கே போயிருந்தாங்க. அப்படிப் போய் காத்துக்கிடந்த ஆங்கர்களில் முத்துக்குமரனும் ஒருவர்.

அர்னவ்
அர்னவ்

அந்த இடத்துல வச்சு அர்னவ் கிட்ட அவர் பேசினாலும் உடனேயே அந்த பேட்டி நிகழவில்லை. ஆனா அடுத்த நாள் அந்த இண்டர்வியூவை எடுத்தார்.

ரெண்டே வருஷத்துல இப்படியொரு மீட் அர்னவ் கூட வரும்னு நினைச்சே பார்த்திருக்க மாட்டார் முத்து’’ என்கின்றனர் மேற்படி சம்பவத்தின் போது முத்துவுடன் இருந்த அவரது நண்பர்கள் சிலர்.

’ஆனா, அர்னவ், அன்ஷிதா ரெண்டு பேரையும் தெரிஞ்ச மாதிரி கூட அவர் காட்டிக்கலையே, தவிர அவங்க பிரச்னை குறித்து சக போட்டியாளர்கிட்டக் கூட எதுவும் பேசின மாதிரி தெரியலையே’ என்றோம்.

’அதெல்லாம் விளையாட்டின் ஒரு உத்தியாகக் கூட இருக்கலாம் இல்லையா’ என்கின்றனர் அவர்கள்.

BB Tamil 8: இவர்கள் Top 5 போட்டியாளர்கள் - ஒரு விரிவான அலசல்

அதான் சீசன் முடிஞ்சு டைட்டில் வின்னரையும் அறிவிச்சாச்சே? ‘விடாது கருப்பு’ மாதிரி எதுக்கு இன்னொரு கட்டுரை?! பிக் பாஸ் வீட்டையேகூட ஒவ்வொரு கதவா கழட்டி ஆணியைப் பிடுங்கிட்டு இருப்பாங்களே?! ஏன் இங்க தேவையி... மேலும் பார்க்க

BB Tamil 8: `அர்ச்சனா கிட்ட அதை சொல்ல வேண்டாம்னு சொல்லியிருந்தேன்… ஆனா!’ - அருண் எக்ஸ்க்ளுசிவ்

பிக் பாஸ் சீசன் 8 முடிவடைந்திருக்கிறது.இந்த சீசனின் டைட்டிலை முத்துக்குமரன் வென்றிருக்கிறார். பிக் பாஸ் முடிந்திருக்கும் வேளையில் வீட்டிலிருந்து வெளியேறிய அருண் பிரசாத்தை சந்தித்துப் பிக் பாஸ் தொடர்பா... மேலும் பார்க்க

BB Tamil 8: `என் தம்பி முத்துக்குமரன் தமிழ்நாட்டையே ஜெயிச்சிருக்கான்!' - தீபக் எக்ஸ்க்ளுசிவ்

பிக் பாஸ் சீசன் 8 முடிவை எட்டியிருக்கிறது.டைட்டிலை முத்துக்குமரன் தட்டிச் சென்றிருக்கிறார். பிக் பாஸ் முடிந்திருக்கும் வேளையில் அதிரடியான கேம்மை விளையாடி முடித்து வெளியேறி இருக்கும் தீபக்கை சந்தித்துப... மேலும் பார்க்க

BB Tamil 8: அன்ஷிதா குறிப்பிட்ட காயப்படுத்திய நபர் யார்? -அர்னவ் சொல்லும் பதில்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ன் கிராண்ட் ஃபினாலே கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது நினைவிருக்கலாம்.அப்போது, `பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் சென்றதும் செய்த முதல் வேலை என்ன?' என ஒவ்வொரு போட்டியாளரிடமும் ... மேலும் பார்க்க

BB Tamil 8: ``அன்னைக்கு சிரிச்சதுக்கான உண்மைக் காரணம் இதுதான்" - ஜாக்குலின் எவிக்சன் குறித்து சத்யா

விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது.முதல் நாள் பதினெட்டு பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் 6 பேர் என மொத்தம் 24 பேர்... மேலும் பார்க்க

Siragadikka Aasai: மலேசியா மாமா சொன்ன விஷயம்; அதிர்ந்த குடும்பம், டிடெக்டிவ் ஆன முத்து

சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பானக் கட்டத்தில் சென்றுகொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் வீட்டின் மூன்று தம்பதிகளுக்குள் இருந்த மனஸ்தாபத்தை பாட்டித் தீர்த்து வைத்துவிட்டு கிளம்புகிறார்.வீட்டில் ஒரு ... மேலும் பார்க்க