காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு விழா: பெலகாவியில் இன்று தொடங்குகிறது
BB Tamil 8: "எனக்கு எதுவும் புரியல; நான் இங்க..." - மனைவியிடம் கண் கலங்கிய தீபக்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 79-வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். கடந்த வாரம் நாமினேட் ஆகியிருந்த போட்டியாளர்களிலிருந்து ரஞ்சித் எவிக்ட் செய்யப்பட்டார். இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் நடக்கவுள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார்கள்.
அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், தீபக்கின் மனைவியும், மகனும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து தீபக் சர்ப்ரைஸ் ஆகிறார்.
உன்னை மிஸ் பண்ணேன்...
மனைவியிடம் பேசிய தீபக், "எனக்கு எதுவும் புரியல. நான் இங்கு இருக்குற ஒவ்வொரு நாளும் உண்மையாதான் இருக்கிறேன்" என்று தீபக் சொல்லி அழுக, "அவரின் மனைவி உங்களால் பெருமையின் உச்சக்கட்டத்தில் இருக்கிறோம்" என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார்.
போட்டியாளர்கள் தீபக்கை அவரின் மனைவியிடம் ப்ரபோஸ் செய்ய சொல்கிறார்கள். "நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன்னு சொல்லுவதற்கு வார்த்தைகளே கிடையாது" என்று தீபக் மனைவியிடம் ப்ரபோஸ் செய்கிறார். "நீங்க உண்மையாகவே என்னைப் பெருமை அடைய வச்சுடீங்க" என்று தீபக்கின் மகனும் நெகிழ்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...