ஹசீனாவின் உறவினரான பிரிட்டன் அமைச்சரின் சொத்துகள் குறித்து விசாரணை: முகமது யூனுஸ...
BB Tamil 8: 'ஏன் மத்தவங்க ஆட்டத்தை திசை திருப்புறீங்க?' - ரவீந்தரைச் சாடிய விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 98 -வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 13 வாரங்களை நிறைவு செய்திருக்கிறது. குறைவான வாக்குகளை பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அருண் எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார். மொத்தம் 24 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் டிக்கெட் டு ஃபினாலே வெற்றியின் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு ரயான் முன்னேறி இருக்கிறார். எஞ்சியுள்ள 7 போட்டியாளர்களில் 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வார இறுதி நாளில் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில் பழைய போட்டியாளர்கள் என்னென்ன கூறி உங்கள் ஆட்டத்தை திசைதிருப்பினார்கள் என்று விஜய் சேதுபதி கேட்கிறார். அதற்கு ஜாக்குலின், தீபக், ரயான், முத்துக்குமரன் ஆகியோர் ரவீந்தரைக் கைக்காட்டினர். இதனால் ரவீந்தரிடம் பேசிய விஜய் சேதுபதி, இவர் பெட்டியை எடுக்க வேண்டும். இவர் விட்டுக்கொடுக்க வேண்டும் எனக் கூறி ஏன் ஆட்டத்தை திசை திருப்புகிறீர்கள் எனக் கேள்வி கேட்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோடில் பார்ப்போம்.