செய்திகள் :

BB Tamil 8 Grand Finale: `நட்பு, காதல், பிரிவு, பகை'; இந்த சீசனில் நடந்த ஹைலைட்ஸ்- முழு தொகுப்பு

post image
முடிவை எட்டிவிட்டது பிக் பாஸ் சீசன் 8.

கிரான்ட் ஃபைனலின் எபிசோட் இன்றைய தினம் ஒளிபரப்பாகவிருக்கிறது. முத்துக்குமரன் இந்த வருடம் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், இல்லை எனவும் பலவிதமான தகவல்கள் சமூக வலதளங்களை ஆக்கிரமித்த வண்ணமிருக்கின்றன. அதிகாரப்பூர்வமான தகவல் இன்று மாலை தெரிந்துவிடும்.

ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு:

இந்தாண்டு பிக் பாஸ் சீசன் பலருக்கும் ஸ்பெஷல். `ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு' என டேக் லைனுக்கேற்ப இந்தாண்டு பல ட்விஸ்ட்களை அரங்கேற்றியிருந்தார் பிக் பாஸ். வழக்கமாக பிக் பாஸில் வீட்டிலிருக்கும் 100 நாள்கள் போட்டியாளர்களுக்கு எமோஷன்களின் ரோலர் கோஸ்டர் ரைட்டாக பேரணுபவத்தைக் கொடுத்திருக்கும். அதேபோல அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பல அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது இந்த `பிக் பாஸ்' வீடு. அதைப் போட்டியாளர்களும் கடந்த வியாழக்கிழமை எபிசோடில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தனர். இந்தாண்டு பிக் பாஸ் சீசன் எப்படி இருந்தது என ஒரு ரவுண்ட் அடித்துப் பார்ப்போமா.....

Bigg Boss Season 8 -

எப்போதும் இல்லாத கான்சப்டில் இந்தாண்டு பிக் பாஸ் வீட்டை ஒரு கோடு போட்டு பிரித்திருந்தனர். ஒரு புறம் ஆண்கள், மற்றொரு பக்கம் பெண்கள் என்கிற கான்சப்டில்தான் இந்த கோட்டை வீட்டின் நடுவே போட்டார்கள். இந்தக் கோடும் அடுத்தடுத்த நாட்களில் காரசரமான விவாதங்களைக் கிளப்பியது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயானதுதான் இந்த சீசனின் போட்டி என்பதுதான் இந்த கோட்டைப் போட்டதற்கான முக்கிய நோக்கம். அப்படி இந்தக் கோட்டைப் பின்பற்றி விளையாட்டும் நகரத் தொடங்கியது. இந்தக் கோட்டை போல மற்ற சீசன்களில் இல்லாத மற்றொரு அதிர்ச்சியான சம்பவமும் நிகழ்ந்து பரபரப்பைக் கிளப்பியது. ஆம், அதுதான் `24 மணி நேர எவிக்‌ஷன்'. ரவீந்திரன் தீட்டிய திட்டத்தில் சிக்கிய போட்டியாளர்கள் அனைவரும் சாச்சனாவை நாமினேட் செய்து வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்தில் வெளியேற்றினார்கள். கனத்த இதயத்துடன் டிராஃபியை உடைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய சாச்சனா ஐந்தாவது நாளிலேயே மீண்டும் வீட்டிற்குள் ரீ என்ட்ரிக் கொடுத்தார்.

முத்துக்குமரன் வலுவான போட்டியாளர்

எப்போதுமே இந்த முதல் வாரம் மிகவும் சவாலானது. போட்டியாளர்களின் முதல் வார நடவடிக்கைகளை வைத்து வெளியே இருக்கும் மக்கள் அவர்களைத் தீர்மானத்துவிடுவார்கள். அப்படித்தான் முதல் வாரம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு விவாத நிகழ்ச்சி டாஸ்கில் தனது பேச்சின் மூலமாக தன்னை நிரூபித்துக் கொண்டார் முத்துக்குமரன். அதற்கு முன்பும் அவர் பல மேடைகளில் இப்படியான விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். ஆனால், பிக் பாஸ் வீட்டில் இந்த டாஸ்க் மூலமாக பேச்சாளர் என்ற ஒரு அடையாளத்தை அழுத்தமாகப் பதிவுசெய்தார் முத்துக்குமரன். `முத்துக்குமரன் வலுவான போட்டியாளர். அவரின் பேச்சில் தெளிவான கருத்துகள் இருக்கிறது!' என பலரின் பாராட்டுகளைப் பெறுவதற்கு இந்த டாஸ்க்தான் தளத்தை அமைத்துக்கொடுத்தது. முதல் வார முடிவில் ரவீந்திரன் முதல் நபராக வெளியேற்றப்பட்டார்.

Bigg Boss tamil 8

இதன் பிறகு, முந்தைய ஆண்டுகளில் நடைபெற்றதைப் போலவே சில டாஸ்க்குகள் நடந்துமுடிந்தது. இரண்டாவது வார எவிக்‌ஷனில் அர்னவ் வெளியேறினார். அதுமட்டுமல்ல, வெளியேறும்போது `ஜால்ராஸ்....' என வீட்டிலிருக்கும் ஆண்போட்டியாளர்களை விமர்சனம் செய்தது அப்போது சில தள்ளு முள்ளுகளை உண்டாக்கியது. அடுத்தாக அமைதியாகச சேஃப் கேம் ப்ளேவுடன் சென்று கொண்டிருந்த போட்டியாளர்களை மூன்றாவது வாரத்தில் நிகழ்ந்த `கில்லர் காயின்' டாஸ்க் தட்டி எழுப்பி சுறு சுறுப்பாக்கியது.

வைல்ட் கார்ட் என்ட்ரியாக களமிறங்கிய போட்டியாளர்கள்!

மூன்றாவது வார இறுதியில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார். வழக்கம் போலவே நான்காவது வாரத்தில் வீட்டிற்கு புதுவரவுகளாக மஞ்சரி, ரயன், ரானவ், வர்ஷினி, ரியா, சிவக்குமார் என ஆறு நபர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் வந்தனர். அதுவரை அமைதியாக இருந்த போட்டியாளர்களுக்கு இந்த வைல்ட் கார்ட் என்ட்ரி சற்றே பயத்தைக் கொடுத்தது. சொல்லப்போனால், இவர்களின் வருகைக்குப் பிறகு பிக் பாஸ் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியது. நான்காவது வார இறுதியில் எவரும் எவிக்ட் செய்யப்படவில்லை.

Bigg Boss Tamil 8

ஐந்தாவது வாரம் அனைவருக்கும் ஒரு எமோஷனல் பயணம்தான். இந்த ஐந்தாவது வாரத்தில்தான் போட்டியாளர் தங்களுடைய பர்சனல் பக்கக் கதைகளை எடுத்துச் சொல்லும் டாஸ்க் வந்தது. வைல்ட் கார்ட் என்ட்ரியாக வருகை தந்தவர்கள்தான் இந்த டாஸ்க்கின் நடுவர்கள். அப்படி பல எமோஷனல் கதைகளைப் போட்டியாளர்கள் பலரும் சொன்னார்கள். இந்த ஐந்தாவது வாரத்தில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களில் ஒருவராக வந்த மஞ்சரிக்கு எதிராக முத்துக்குமரனைத் தவிர மொத்த பிக் பாஸ் வீடும் இருந்தது. ஆனால், தன்னுடைய பேச்சாற்றலாலும், சிந்தனையாலும் மக்கள் மனதிலும் வீட்டின் மற்ற போட்டியாளர்களின் மனதிலும் நீக்கமற இடத்தைப் பிடித்துக்கொண்டார் மஞ்சரி. ஐந்தாவது வாரத்தின் இறுதியில் சுனிதா மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

ஸ்கூல் டாஸ்க் - அரங்கேறிய ரொமான்டிக் தருணங்கள்!

ஆறாவது வாரத்தில் புதியதாக ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. அத்தனை போட்டியாளர்களும் யூனிஃபார்ம் அணிந்துகொண்டு மாணவர்களாக என்டர்டெயின் செய்ய பல சேட்டைகளை நிகழ்த்தினர். அப்போதுதான் புதிய நட்பு, காதல் எனப் பலவும் மலர்ந்தன. இந்த ஆறாவது வாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த ரியா எவிக்ட் செய்யப்பட்டார். ஏழாவது வாரத்தில் மஞ்சரி கேப்டனானார். வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த இரண்டு வாரங்களிலேயே தான் கேப்டனுக்குத் தகுதியானவர் என்பதை நிரூபித்துக் கேப்டன் பதவியை ஏற்றார் மஞ்சரி. இந்த வாரத்தில் பல ரகளைகள் அரங்கேறிய அந்த பிக் பாஸ் தர்பார் டாஸ்க் நடைபெற்றது. ஆறாவது வாரத்தைத் தொடர்ந்து ஏழாவது வாரத்தில் மற்றொரு வைல்ட் கார்ட் போட்டியாளரான வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டார்.

Bigg Boss Tamil 8

இந்த சீசனில் புதிதாக பின்பற்றப்பட்டு வந்த அந்த `ஆண்கள் vs பெண்கள்' என்கிற போட்டி 50-வது நாளில் மாறியது. அந்தக் கோட்டை எடுத்துவிட்டு புதிய கேம் ஒன்றைத் தொடங்கிவைத்தார் பிக் பாஸ். இந்தக் கோடு ஆண்களுக்கு சாதகமாகவே இருக்கிறது என ஆறாவது வாரத்திலிருந்து பெண்கள் அணியில் பேச்சுகள் நடந்து வந்தன. அதாவது பெரும்பாலான சமயங்களில் நாம் ஆண்கள் இடத்திலிருக்கும் கிச்சனுக்குச் செல்வதற்குப் பல டாஸ்க்குகள் செய்து வருகிறோம்.

முழுமையாக நிரூபித்த தீபக்!

ஆனால், ஆண்கள் அணியினர் சுலபமாக லிவிங் ஏரியாவுக்கு வந்துவிட்டு திரும்புகிறார்கள் என்பதே பெண்கள் அணியின் கருத்தாக இருந்தது. ஐந்தாவது வாரத்திற்கு பிறகு ஆட்டம் மாற்றத்தைக் கண்டது. களமும் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்த எட்டாவது வாரத்தில் கேப்டனாகி தன்னை முழுமையாக நிரூபித்து காட்டினார் தீபக். இதே எட்டாவது வாரத்தில்தான் பல சண்டைகளுக்குக் காரணமான அந்த பொம்மை டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரத்தில்தான் ரயனுக்கும், ரானவுக்கும் சண்டை முட்டியது. அடிதடிக்குச் சென்ற இவர்களின் சண்டையைச் சுட்டிகாட்டி வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதி கடுமையாகச் சாடியிருந்தார். எட்டாவது வாரத்தில் சிவகுமார் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் போட்டியாளர்கள்

ஒன்பதாவது வாரத்தில் ஏஞ்சல்ஸ், டெவில் டாஸ்க் நடைபெற்றது. டெவிலாகப் பலரும் செய்த செயல்கள் ஏஞ்சல்ஸை பர்சனலாகக் காயப்படுத்தி கலங்கவைத்தது. சொல்லப்போனால், இந்த டாஸ்க்கிலிருந்து பலருடைய விளையாட்டும் முற்றிலுமாக மாறியது. இந்த வாரத்தின் இறுதியில் சாச்சனாவும் , ஆனந்தியும் வெளியேறினார்கள். பத்தாவது வாரத்தில் முதல் முறையாக ரஞ்சித் கேப்டனானார். இந்த வாரத்தில் மேலாளர்கள் vs பணியாளர்கள் டாஸ்க் நடைபெற்றது.

ரானவுக்குக் கையில் ஏற்பட்ட அடி!

இந்த டாஸ்க்கின் சமயத்தில்தான் அருணுக்கும், தீபக்கிற்கும் இடையே சண்டை வெடித்தது. பத்தாவது வாரத்தில் சத்யாவும், தர்ஷிகாவும் வெளியேறினார்கள். 11-வது வாரத்தின் கேப்டனாக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வாரத்தில் 'செங்கலா செங்கலா' டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில்தான் ரானவுக்கு கையில் அடிப்பட்டது. ரானவுக்கு கையில் அடிப்பட்ட சமயத்தில் அவர் நடிப்பதாகப் பலரும் அவரைக் குற்றம் சாட்டினார். ஆனால், அப்படி சொன்னது தவறு என்பதை உணர்ந்து மற்ற போட்டியாளர்களும் மன்னிப்பும் கோரியிருந்தனர். இந்த டாஸ்க் சமயத்தில்தான் ஜாக்குலினுக்கும், அன்ஷிதாவுக்கும் அனல் பறக்கும் ஃபைட் நடந்தது. இந்த சண்டையில்தான் அன்ஷிதா ஜாக்குலினுக்கு `பிக் பாஸ் சீசன் 8-ன் நடிகை' என்ற பட்டத்தைக் கொடுத்தார். இந்த வாரத்தின் இறுதியில் ரஞ்சித் ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.

பவித்ரா
பவித்ரா

12-வது வாரத்தில் பவித்ரா கேப்டனாக வேண்டும் என முத்துக்குமரன் விட்டுக் கொடுத்ததால் இந்த கேப்டன்சி டாஸ்க்கை மொத்தமாக ரத்து செய்தார் பிக் பாஸ். இந்த சம்பவத்துக்குப் பிறகு தன் தவறை எண்ணி கண் கலங்கியிருந்தார் முத்து. இதே வாரத்தில்தான் ஃப்ரீஸ் டாஸ்க்கும் நடைபெற்றது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து எமோஷனல் தருணங்களால் நிரம்ப செய்தனர். இந்த வாரத்தின் இறுதியில்தான் ஜெஃப்ரியும், அன்ஷிதாவும் வெளியேறினர்.

`டிக்கெட் டு பினாலே' டாஸ்க்!

13-வது வாரத்தில் சுறு சுறுப்பாக அனைவரும் 'டிக்கெட் டு பினாலே' டாஸ்க்கில் களமிறங்கினர். போட்டி மனப்பான்மை அதிகமாக இருக்கும் இந்தக் களத்தில் பல சண்டைகள் வெடித்தன. சொல்லப்போனால், அதிரடியாக முத்துக்குமரன் ஆடியிருந்தாலும் மற்றொரு பக்கம் 'டாஸ்க் பீஸ்ட்' ரயான் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்து 'டிக்கெட் டு பினாலே' வைத் தட்டிச்சென்றார். இந்த வாரத்தில் ரானவும் மஞ்சரியும் வெளியேறினர். அப்படியே மெல்ல 14-வது வாரம் நகர்ந்தது. இந்த வாரத்தில் தீபக் மற்றும் அருண் விளையாட்டிலிருந்து வெளியேறி இருந்தனர். 15-வது வாரத்தில் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த அந்தப் பணப்பெட்டி வந்தது. ஆனால், இம்முறை புதிய டிவிஸ்ட்டாக இந்தப் பணப்பெட்டியை எடுப்பவர்கள் இந்தப் போட்டியிலும் தொடரலாம் எனக் கூறிவிட்டார் பிக் பாஸ்.

ஜாக்குலின்
ஜாக்குலின்

ஆனால், பெட்டியை வீட்டிற்கு வெளியே ஒரு தொலைவில் வைத்துவிடுவார்கள். அதனை ஓடிச் சென்று குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துவிட்டு வருபவர்களுக்கு அந்த பெட்டியும், பிக் பாஸ் விளையாட்டும் சொந்தம் என அறிவித்துவிட்டார்கள். முத்துக்குமரன், பவித்ரா, ரயான், விஷால் என நான்கு நபர்கள் முயன்று பணத்தை எடுத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். முனைப்புடன் போட்டியில் களமிறங்கிய செளந்தர்யா தொலைவைப் பார்த்து அச்சமடைந்து வீட்டிற்கு நேரத்திற்குள் திரும்பிவிட்டார். இறுதியாக ஜாக்குலின் 8 லட்ச ரூபாய் பெட்டியை எடுப்பதற்காகச் சென்று வீட்டிற்குத் தாமதமாக வந்துவிட்டார். ஆதலால் மனமுடைந்துப் போன ஜாக்குலின் வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவத்தை பிக் பாஸ் வீட்டிலிருந்த அனைவரையும் உலுக்கியது. ஜாக்குலினின் தைரியத்தைப் பாராட்டி அவருடைய டிராபியை உடைத்துக் கொள்ளாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் எனக் கூறிவிட்டார். இன்று பைனலில் யார் வெல்வார் என்பதுதான் பலரும் எதிர்பார்ப்பது அற்கான விடை இன்று கிடைத்துவிடும்.

இந்த வருட பிக் பாஸ் சீசன் 8 ல் உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யார் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

BB Tamil 8 Day 104: மண்டையைக் கழுவிய முத்து; ‘Toxic free season’ - சிறப்பாகக் குறிப்பிட்ட சுனிதா

‘பிக் பாஸ்-ன்றது நிகழ்ச்சி மட்டுமல்ல - எமோஷன். நீங்க வீட்டுக்குள்ள இருக்கும் போது உணர்வுகளின் எக்ஸிபிஷன். வெளில போய்ட்ட பிறகு உணர்வுகளின் மியூசியம்’ போட்டியாளர்களுக்கு விடை கொடுத்து அனுப்பும் நேரத்தில... மேலும் பார்க்க

காய்ச்சல், கடுங்குளிர், அட்டைக்கடி! சந்திச்சதே இல்ல இப்படியொரு ஷூட்டிங்!- `சின்ன மருமகள்' நவீன்

அடர்ந்த காடு, பீதி கிளப்பும் காட்டுவிலங்குகளின்சத்தம், நடுங்க வைக்கும் குளிர்.. இவற்றின் ஊடே சுமார் பத்து நாள்கள் இருந்து ஷூட்டிங் முடித்து வந்திருக்கிறார்நடிகர் நவீன்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்... மேலும் பார்க்க

BB Tamil 8 : `இந்த வீட்டை விட்டு...'- எமோஷனலாக பேசிய முத்துக்குமரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 104- வது நாளுக்கான ( ஜனவரி 18) புரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 6 -ம் தேதி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கியது. இம்முறை விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்... மேலும் பார்க்க

`யார்கிட்டயும் ஒரு பைசா கூட வாங்கறதில்லை' - சமூக பணி குறித்து நடிகர் ஶ்ரீ குமார்

`நம்மால் முடிஞ்ச உதவியை...’ஆதரவு ஏதுமின்றி, சாலையோரங்களில், பேருந்து நிலையங்களில் தஞ்சமடைந்திருக்கும் முதியோர், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக அவர்களைக் கண்டறிந்து, மருத்துவ உதவ... மேலும் பார்க்க

BB Tamil 8 Grand Finale: `வெளியேறும் இருவர்' - நான்காம், ஐந்தாம் இடங்கள் பிடித்தவர்கள் இவர்கள்தான்

விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ன் கிராண்ட் ஃபினாலே ஷூட் சென்னை பூந்தமல்லியிலுள்ள பிக்பாஸ் செட்டில் இன்று காலை தொடங்கி தற்போது போய்க் கொண்டிருக்கிறது... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 103: அழறதால சொன்னதெல்லாம் நியாயம்ன்னு ஆகிடாது- கடைசி நேரம்; காத்திருக்கும் ட்விஸ்ட்

இன்னமும் இரண்டே நாட்கள். இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதற்கான விடை தெரிந்து விடும். அது யாராக இருந்தாலும் தகுதியான நபரின் கையில் சென்று சேரும் போதுதான் அந்த வெற்றிக்கே ஒரு நியாயம் கிடைக்கிறது. அந்... மேலும் பார்க்க