செய்திகள் :

BB Tamil 9: வைல்டு கார்டு என்ட்ரியில் கணவன் மனைவி; தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறை

post image

அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 இரண்டு வாரங்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.

பார்வதி, எஃப்.ஜே. வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளனர்.

நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் வெளியேறி விட்டதாக தெரிகிறது.

முதல் வார எவிக்‌ஷனில் பிரவீன் காந்தியும் கடந்த வாரம் அப்சரவாவும் வெளியேறியுள்ளனர்.

Bigg Boss Tamil Season 9
பிக்பாஸ் தமிழ் சீசன் 9

போட்டியாளர்கள் மத்தியில் ஒருவழியாக ஆட்டம் இப்போதுதான் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில் ஒரு அதிரடியாக இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்களை இறக்கத் திட்டமிட்டிருக்கிறார் பிக் பாஸ். இது தொடர்பாக நம்பகமான தகவல்கள் நமக்குக் கிடைத்தன. அதன்படி அடுத்த சில தினங்களில் நடிகர் பிரஜினும் அவரது மனைவி சாண்ட்ராவும் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் இந்த சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரி இருக்காது எனவும் ஒரு பேச்சு அடிபட்டது ஆனால் தற்போது இரண்டு பேர் அதுவும் கணவர் மனைவியான இருவர் அனுப்பப்படவிருப்பது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் ஒருவித ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கிறது.

இதற்கு முன் ஒரு சீசனில் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவரையும் அனுப்பி வைத்தார்கள். ஆனால் அப்போது இருவருக்கும் இடையில் பிரச்னை போய்க் கொண்டிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அந்த வீட்டுக்குள் அறிமுகமாகி நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தது நடந்திருக்கிறது. மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது நடந்தது. ஆனால் தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே கணவன் மனைவி போட்டியாளர்களாகச் செல்வது இதுதான் முதல் முறை.

பிரஜின், சாண்ட்ரா

பிரஜின் தமிழில் தனியார் தொலைக்காட்சி வந்த போது தொகுப்பாளராக  அறிமுகமானார். இவருக்கு அந்த காலத்திலேயே பெண் ரசிகைகள் அதிகம். தொகுப்பாளராக இருந்தவர் பிறகு சீரியல் சினிமா என நகர்ந்தார். சில படங்களில் நடித்தாலும் சினிமா எதிர்பார்த்த அளவு கை கொடுக்கவில்லை. இருப்பினும் தற்போது வரை சினிமா முயற்சியைக் கைவிடாதவராய் இருக்கிறார்.

சாண்ட்ராவும் தொகுப்பாளராகவே தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமானவர். பிரஜினைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவரும் சீரியல், சினிமா என முயற்சித்து வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இந்த தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். தொடர்ந்து சாண்ட்ரா குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காக பிரேக் எடுத்தார்.

இந்தப் பின்னணியில் தற்போது இருவரும் பிக் பாஸ் செல்கின்றனர்.

`கெட்டி மேளம்' சீரியலில் இருந்து வெளியேறினார் ஹீரோ சிபு சூர்யன்; காரணம் என்ன?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘கெட்டி மேளம்’ தொடரிலிருந்து நடிகர் சிபு சூரியன் வெளியேறியுள்ளார்.வெளியேற்றத்துக்கான நிஜமான காரணம் தெரியவில்லை. ஆனால் அவருக்கு பதில் வேறு நடிகரை கமிட் செய்வதில் தயார... மேலும் பார்க்க

BB Tamil 9: "பழைய கதையை விட்டுட்டு இங்க வருவோமா?" - விஜே பார்வதியிடம் காட்டமாகப் பேசிய கனி

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்டோபர் 21) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 15: `ஃபீல் பண்ற அளவுக்கு அவன் ஒர்த் இல்ல' - தொடரும் அழுகை

பிக் பாஸ் வீட்டிற்குள் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. நாமினேஷன் சடங்கு நடந்தது. பைசன் திரைப்படக் குழு பிரமோஷனிற்காக வந்தார்கள். அவ்வளவுதான்.மறுபடியும் அதேதான். ‘அதுல ஒண்ணும் இல்ல. கீழே போட்ரு’ காமெடிதான... மேலும் பார்க்க