அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: `காவல்துறை மீது சந்தேகம்...' - கம்யூனிஸ்ட் கட்சி க...
Beauty Tips: அழகான முகத்துக்கு 6 டிப்ஸ்!
கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்துக்கு என்ன தீர்வு?
பாதாம் எண்ணெய், கற்றாழைச்சாறு, ரோஸ் வாட்டர் கலவையைக் கருவளையம் இருக்கும் பகுதிகளிலோ, முகம் முழுக்கவோ அப்ளை செய்யவும். 10, 15 நிமிடங்கள் வைத்திருந்து, சோப்பை தவிர்த்து வெறும் தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இதைத் தொடர்ந்து பின் பற்றி வந்தால் கருவளையம் படிப்படியாக மறையும்.
பருக்களையும், அவை ஏற்படுத்தும் தழும்புகளையும் நீக்க டிப்ஸ்!
சருமத்தில் அதிக எண்ணெய்ப் பசை ஏற்படும்போது பாக்டீரியாவும் எண்ணெய்யும் சேர்ந்து பரு உருவாகலாம். எனவே, முகத்தை அடிக்கடி மைல்டு ஃபேஸ்வாஷ் கொண்டு கழுவலாம். முல்தானி மிட்டி, கஸ்தூரி மஞ்சள், கறிவேப்பிலை பேஸ்ட் ஆகியவற்றைக் கலந்து ஃபேஸ் பேக்காக போடலாம். பருவைக் கிள்ளும்போது அதிலுள்ள தொற்று சுற்றியிருக்கும் இடங்களிலும் பரவிப் பரு அதிகமாகும். பருவைக் கிள்ளி எடுக்கும்போது அங்குக் குழி ஏற்படலாம். அதனால், பருக்களைத் தொடாமல் இருப்பது அவசியம்.
மருக்களை நீக்குவது எப்படி?
நாற்பது வயதுக்கு மேல், பலருக்குக் கழுத்துப் பகுதியில் மருக்கள் வருகின்றன. கழுத்தில் அணிகிற நகையால் ஏற்படும் உராய்வு, கழுத்தில் தங்கும் வியர்வைப் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். கஸ்தூரி மஞ்சள், வேப்பிலையை அரைத்து மருவில் தொடர்ந்து போட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சில மருக்களை எலெக்ட்ரிக் காட்டரைசேஸன் (Cauterization) அல்லது லேசர் முறையில் எடுக்க வேண்டியிருக்கலாம்.
பிளாக் ஹெட்ஸ் ரிமூவ் செய்ய..?
சருமத் துவாரங்களில் அழுக்கு அடைவதே பிளாக் ஹெட்ஸ். பருக்கள் வந்துபோன இடத்திலும் இது வரலாம். கன்னம், மூக்குப் பகுதிகளில் இது அதிகமாகக் காணப்படும். பிளாக் ஹெட்ஸை நாமாக எடுக்க முயலக்கூடாது. தற்போது இதை ரிமூவ் செய்ய பார்லர்களில் பல புதிய சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றவும்.
உதடுகளின் கறுமை நீங்க..?
கறுமையான உதடுகளுக்கு மிதமான வெந்நீர் ஒத்தடம் கொடுக்கவும். பின்பு லிப் பாம் பயன்படுத்தலாம். ரோஜா இதழ்களைச் சர்க்கரை நீரில் கலந்து உதடுகளில் வைத்து வர, கறுமை நீங்கி உதடு பிங்க் ஆக மாறும்.
கழுத்துப்பகுதி கறுமையிலிருந்து விடுபட..?
இப்போது இது மிகவும் பரவலாக உள்ளது. வளர் இளம் பருவத்தில் ஆண், பெண் குழந்தைகள் இருவருமே பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு உடல் எடை அதிகமாகும்போது ஹார்மோன் மாற்றத்தால் எடை கூடுகிறது. இது 'Dirty neck syndrome' என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு ஓட்ஸ் மற்றும் தேனைப் பயன்படுத்தலாம். ஓட்ஸை பாலில் ஊறவைத்து பின் வேகவைத்தால் அது மிருதுவாகிவிடும். அதனுடன் தேன் கலந்து கழுத்தில் அப்ளை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...