செய்திகள் :

Betta Kurumba பழங்குடி இனத்தின் முதல் வழக்கறிஞர், தடம் பதித்த முதுமலையின் மகள் கின்மாரி

post image

பழங்குடிகளின் தாய்மடி அல்லது தொட்டில் என வர்ணிக்கப்படும் நீலகிரியில் 6 வகையான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பழங்குடியின மக்களும் தங்களுக்கே உரித்தான உணவு, உடை, மொழி, இசைக்கருவிகள் , நடனம், வழிபாடு, தொழில் போன்றவற்றை பின்பற்றி வருகின்றனர்.

வழக்கறிஞர் கின்மாரி

நீலகிரியில் வாழ்ந்து வரும் பழங்குடி இனங்களில் ஒன்று தான் பெட்ட குறும்பர் ( Betta Kurumba) இனம். பெட்டா என்கிற மலையை குறிக்கும் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மக்கள் குறும்பர் பழங்குடி இனத்தின் ஒரு பிரிவாக அறியப்படுகின்றனர். திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தேனெடுத்தல் , மீன் பிடித்தல் மற்றும் வன மூலிகைகளை சேகரிக்கும் திறன் கொண்டவர்கள்.

பூர்வகுடிகளான இந்த மக்களுக்கு அரசின் அடிப்படை வசதிகள் என்பது இன்றளவும் எட்டாக்கனியாகவே இருப்பதால், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு போன்றவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே தவித்து வருகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசிலர் மட்டுமே போராடி உயர் கல்வியைப் பெற்று‌ முன்னேறி வருகின்றனர்.

வழக்கறிஞர் கின்மாரி

அந்த வரிசையில், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய பெட்ட குறும்பர் மாணவி கின்மாரி, சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ, எல்.எல்.பி ஹனஸ் பட்டத்தை நிறைவு செய்து தங்கள் இனத்தின் முதல் வழக்கறிஞர் என்கிற வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்.

விகடனின் வாழ்த்துகளுடன் கின்மாரியிடம் பேசினோம், " முதுமலையில் உள்ள பொக்காபுரம் தான் சொந்த ஊர். அப்பா மாறன் கூலித்தொழிலாளி. அம்மா மஞ்சுளா குடும்பத்தை கவனித்துவருகிறார். மூன்று பெண் குழந்தைகளில் நான் தான் கடைசி. பக்கத்தில் உள்ள பொக்காபுரம் அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தான் 8 - ம் வகுப்பு வரை படித்தேன். அதே முதுமலையில் உள்ள கார்குடி அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் 9, 10 - ம் வகுப்புகளை படித்தேன்.

வழக்கறிஞர் கின்மாரி

பின்னர் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11,12 -ம் வகுப்புகளை முடித்தேன். கார்குடி ஆசிரியர் வழிகாட்டுதலில் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் சேர்ந்தேன். எங்கள் இனத்தின் முதல் நபராக இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்பதால் நிறைய சவால்கள் இருந்தன. நிதி நெருக்கடி தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது.

அப்பா வேலை பார்க்கும் இடத்தின் உரிமையாளர் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 5 ஆண்டுகளாகப் படித்து தற்போது பி.ஏ எல்.எல்.பி ஹானர்ஸ் பட்டத்தை பெற்றிருக்கிறேன். எங்கள் இனத்தின் முதல் வழக்கறிஞர் என்பதில் கம்பீரமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. எங்களுக்கான உரிமைகள் நிறைய இருக்கிறது. ஆனால், அது எங்களுக்கே தெரியாமல் இருக்கிறது. அவற்றை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது.

வழக்கறிஞர் கின்மாரி

பழங்குடிகளை உயர் கல்வியில் முன்னேற்ற வழிவகை செய்ய வேண்டும். சிறு வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதனை ஒழிக்க வேண்டியதே முதல் கடமையாக இருக்கிறது. 3 ஆண்டுகள் வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் பிராக்டிஸ் செய்துவிட்டு நீதித்துறை தேர்வுகளை எழுத வேண்டும் என்பது விருப்பமாக இருக்கிறது " என்றார் நம்பிக்கையுடன்.

பல் செட், கண்ணாடி இல்லை, டெக்னாலஜி அப்டேட், ஆங்கிலப் புலமை: 100 வயது ஆச்சர்ய மனுஷி சீதாலட்சுமி

திருப்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த பயணம்தான் வாழ்க்கை. அந்தப் பயணத்தில், நமக்கு வழிகாட்டவும், தடுமாறும்போது தாங்கிப் பிடிக்கவும், அனுபவங்களின் மூலம் ஆலோசனைகள் சொல்லவும் பெற்றோர் பக்கத்தில் இருப... மேலும் பார்க்க

”கைகளை உயர்த்தி வாழ்த்துங்கள்”- மாற்றுத்திறனாளி மாணவர்களை நெகிழ வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் தங்கள் குறைகளை மனுவாக கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவர் தியாகராஜன் உரிய ... மேலும் பார்க்க

``எங்கள மாதிரி இருப்பவர்களுக்கு நாங்களே முன்னோடிகள்'' - திருநங்கையை காதல் திருமணம் செய்த இளைஞர்!

"காதல்" பாலினத்தையும் கடந்தது`காதல்' என்ற இந்த உணர்வு சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் கடந்த ஒன்று என்பதை நம்மில் பலருக்கும் தெரியும். தற்போது இந்தக் காதல் பாலினத்தையும் கடந்ததாக நமக்கு நிரூபிக்க... மேலும் பார்க்க

உதவிக்கரம் நீட்டிய விகடன் வாசகர்கள்; டி.வி வழங்கிய ஆற்காடு சாரதி - நெகிழும் ராணியின் குடும்பம்!

கடந்த 14-9-2025 ஜூ.வி இதழில், “எங்க நாலு பேரையும், கருணைக்கொலை பண்ணிடுங்க...” ஆட்சியரின் காலில் விழுந்து கதறிய தாய்... நெஞ்சையறுக்கும் ஒரு குடும்பத்தின் சோகம்! - என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிர... மேலும் பார்க்க

’’கூடப் படிக்கிற பசங்க தாத்தான்னு கூப்பிடுவாங்க’’ - வடலூரில் ஓர் இன்ட்ரஸ்ட்டிங் மனிதர்!

கற்பதற்கு வயதொன்றும் தடையில்லை என இதுவரை பலர் நிரூபித்துள்ளனர். அவர்களுடன் இணைந்திருக்கிறார் கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த 72 வயதான செல்வமணி. செல்வமணி ஐ.டி.ஐ முடித்துவிட்டு, நெய்வேலி நிலக்கரிச் சுர... மேலும் பார்க்க

வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதித்த சந்துரு குமார்

சமூக சேவையில் 26 வயது சந்துரு குமார் சாதனைசமூகத்தில் பெரும்பாலானவர்கள் “சேவை செய்ய பணம் இருந்தால் தான் முடியும்” என்று எண்ணுகிறார்கள். ஆனால் 26 வயது இளைஞர் சந்திரு குமார் தனது சேவையால், சேவைக்குப் பணம... மேலும் பார்க்க