செய்திகள் :

BGT : 'கம்பீர் vs பிசிசிஐ' - மாற்றி மாற்றி பழி போடும் அவலம்!

post image
நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்திருக்கிறது. இப்போதைக்கு அதிகபட்சமாக சிட்னி டெஸ்ட்டை வென்றால் இந்திய அணியால் தொடரை டிரா செய்ய முடியும், அவ்வளவுதான். முதல் 4 போட்டிகளிலுமே இந்தியாவின் செயல்பாடு யாருக்குமே திருப்தி தரவில்லை. இந்திய அணி எல்லா பக்கத்திலிருந்தும் கடுமையான விமர்சனங்களையே சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்திய அணிக்கு இது ஒரு இக்கட்டான நிலை. ஆனால், இப்போதும் இதை சரி செய்யும் வேலைகளை பார்க்காமல், இந்த நிலைக்கு யார் மீது பழி போடுவது எனும் வேலையில் பிசிசிஐ தரப்பும் கம்பீர் தரப்பும் இறங்கியிருக்கிறார்கள். இருதரப்பும் மாறி மாறி சேற்றை வாரியும் இரைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கம்பீர்

நேற்று முழுவதும் இணையத்தில் ஒரு செய்தி ஓடிக் கொண்டிருந்தது. அதாவது, இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் புஜாராவை ஆட வைக்க வேண்டும் என கம்பீர் விரும்பியதாகவும், இந்திய அணியின் தேர்வுக்குழுதான் அதற்கு முட்டுக்கட்டை போட்டது என்பதுதான் அதன் அடிப்படை. இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே அணியில் புஜாரா மாதிரி ஒரு வீரர் இல்லையே எனும் ஆதங்கத்தை ரசிகர்கள் கொட்டித் தீர்த்திருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புஜாரா சம்பந்தமான செய்தி பரவிக் கொண்டிருந்த போதே, பிசிசிஐ தரப்பில் ஒரு அதிகாரி கூறியதாக இன்னொரு செய்தியும் பரவியது. அதாவது, டிராவிட்டுக்கு பிறகு அடுத்த பயிற்சியாளர் யார் எனும் கேள்வி எழுந்த போது கம்பீரை பிசிசிஐ முதல் வாய்ப்பாக பார்க்கவில்லை என்றும் பலரையும் முயன்று பார்த்துவிட்டுதான் கம்பீருக்கு வந்தோம் என்றும் அந்த அதிகாரி கூறியதாக ஒரு செய்தி.

இருதரப்பிலும் நேற்று வெளியிடப்பட்ட செய்திகளே, இந்த இருதரப்பும் தோல்விக்கான பொறுப்பை ஏற்க தயாராக இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

கம்பீர் புஜாராவை எடுக்க விரும்பி பிசிசிஐ அதற்கு மறுப்பு தெரிவித்ததாக சொல்கிறார்கள் இல்லையா. இது முழுக்க முழுக்க ரசிகர்களின் பொதுப்படையான கருத்திலிருந்து தப்பிக்கும் வேலை. புஜாரா நல்ல வீரர்தான். கடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாக ஆடினார். தற்காப்பு ஆட்டத்தில் வல்லவர்தான். ஆனால், ஒரு கட்டத்தில் அவரின் பார்ம் சரிந்த போதுதான் அவரை அணியிலிருந்து நீக்கினார்கள். ரஹானேவும் அதே கதைதான். அவர்கள் கடந்து இந்திய அணி வர ஆரம்பத்து விட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் ஆடப்போகும் வீரர்கள்தான் இப்போது அணியில் இருக்கிறார்கள். இது வருங்காலத்தை வலுப்படுத்த வேண்டிய நேரம்.

Gambhir

இன்னும் கடந்த காலத்திலேயே தேங்கியிருப்பது அபத்தம். இது கம்பீருக்கும் தெரியும். ஆனாலும், ரசிகர்கள் மத்தியில் புஜாரா இருந்தால் அணி வேறு மாதிரியாக இருந்திருக்கும் என பொதுப்படையாக ஒரு கருத்தாக்கம் நிலவி வருகிறது. அதற்கு ஒத்திசையும் வகையில் தானும் புஜாராவை அணியில் எடுக்க நினைத்தேன் என்கிற செய்தி வெளியானால், தற்போதைய சறுக்கலுக்கு பிசிசிஐதான் காரணம் கம்பீர் காரணமில்லை என ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான எண்ணம் ஏற்படும்.

அப்படி கம்பீர் புஜாராவை அணியில் எடுக்க விரும்பியிருந்தாலும் அந்த செய்தி இப்போது ஏன் வெளியாக வேண்டும்? ஏனெனில், இப்போதுதான் கம்பீர், ரோஹித், பிசிசிஐ, சீனியர் வீரர்கள் என எல்லா தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் கம்பீர் மீதான இமேஜ் பாதிக்கப்படும் என்பதற்காகத்தான் அதை சரிகட்டும் வகையில் அந்த புஜாரா செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இது குயுக்தியான PR வேலை.

இதையேத்தான் பிசிசிஐயும் செய்து கொண்டிருக்கிறது. பயிற்சியாளராக பதவியேற்ற முதல் 6 மாதங்களில் கம்பீர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை. எல்லாமே சொதப்பல்தான். தங்களின் தேர்வு இப்படி மோசமான ரிசல்ட்டை கொடுப்பது பிசிசிஐக்குதான் இழுக்கு. அதை ஈடுகட்டும் வகையில்தான் கம்பீர் எங்களின் முதல் சாய்ஸ் இல்லை. வேறு வழியே இல்லாமல்தான் கம்பீரை அழைத்து வந்தோம் என்பது போல செய்தியை கசியவிட்டு வருகிறார்கள். ஆனால், உண்மை வேறு என்பது எல்லாருக்கும் தெரியும். அவர்கள் சொல்வதைப் போல கம்பீர் முதல் சாய்ஸ் இல்லைதான். ஆனால், ஐ.பி.எல் கோப்பையை வென்றவுடன் சிவப்புக் கம்பளம் விரித்தே கம்பீரை பிசிசிஐ அழைத்து வந்தது. W.V.ராமன் பயிற்சியாளராக நல்ல அனுபவம் கொண்டவர், அவரை விட்டுவிட்டு கம்பீரை டிக் அடித்தது பிசிசிஐதான்.

பிசிசிஐ

இப்போது ரசிகர்கள் மத்தியில் கம்பீர் மீது ஒருவித வெறுப்பு இருக்கிறது. நாங்களும் அதை மனநிலையில்தான் இருக்கிறோம். நாங்களும் அவரை நம்பி ஏமாந்துவிட்டோம் என்பது போன்ற இமேஜை உருவாக்கவே பிசிசிஐ முயன்று கொண்டிருக்கிறது.

பிரச்சனையை கண்டறிந்து நிதர்சனத்தை உணர்ந்தால் தீர்வு கிடைக்கும். அதை விடுத்து மாறி மாறி பழி போட நினைத்தால் இந்திய அணியின் நிலை இன்னும் அதளபாதாளத்தையே எட்டும்.

Champions Trophy : சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா ஆடுவாரா? - அணியை எப்போது அறிவிக்கும் பிசிசிஐ?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்தத் தொடருக்கான உத்தேச அணியை ஜனவரி 12 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி கெடு விதித்... மேலும் பார்க்க

Indian Team: 'கடைசி வாய்ப்பில் கோலி; ஓய்வு அறிவிப்பை நோக்கி ரோஹித் சர்மா!' இருவரின் எதிர்காலம் என்ன?

பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய அணி 3-1 என தொடரை இழந்திருக்கிறது. இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் சோபிக்கவே இல்லை. தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்ததே விராட் கோலியும் ர... மேலும் பார்க்க

Andhra: "ஜெல்லி மீன்களின் அச்சுறுத்தல்; ஆமைகளின் துணை" - 52 வயதில் கடலில் 150 கி.மி நீந்திய பெண்!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த 52 வயது பெண்மணி விசாகாபட்டினம் முதல் காக்கிநாடா வரை 150 கிலோ மீட்டர் தூரத்தைக் கடலில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.கோலி ஷியாமளா என்ற நீச்சல் வீராங்கனை டிசம... மேலும் பார்க்க

Aus v Ind : 'தொடரை இழந்த இந்தியா!' - கம்பீர் செய்த அந்த 3 தவறுகள்

சிட்னி டெஸ்ட்டை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அத்தோடு இந்தத் தொடரையும் 2-1 என வென்று கோப்பையையும் கைப்பற்றியிருக்கிறது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற ... மேலும் பார்க்க

அர்ஜுனா விருது: 'சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கோம்; ஆனாலும் அப்பா..!' - நெகிழும் துளசிமதி முருகேசன்

கடந்த செப்டம்பர் மாதம் பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனைப் படைத்திருந்தார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்.இதனைத் தொடர்ந்து... மேலும் பார்க்க