ஜஸ்ட் ஒன் கால் ப்ளீஸ்! - திடீரென வரும் விருந்தாளிகளுக்கு சமர்ப்பணம்
Bigg Boss 9: 'அறிவு இருக்குறவுங்களுக்கு ஒரு விஷயம் சொன்னப் புரியும்'- பார்வதியை காட்டமாக பேசிய கனி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.13) இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் விஜே பார்வதிக்கும், கனி திருவுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது.
விஜே பார்வதி கிட்சன் டேபிளில் ஏறி அமர்ந்திருந்தார். அவரை கீழே இறங்குமாறு துஷார் சொல்ல பார்வதி முடியாது என்று சொல்லி டேபிளிலேயே அமர்ந்திருந்தார்.

அதன்பிறகு வந்த கனிதிரு, " உங்க டீமிற்கு எந்த கொம்பும் முளைக்கல. நீங்க அநியாயமா ஒரு விஷயம் பண்ணுவிங்க.
அதை யாரும் கேட்கக்கூடாதா? அப்படியே நாங்க கேட்டாலும் உங்களை கார்னர் பண்றோம்னு சொல்லி சீன போடுவிங்க.
அதை பார்த்திட்டு யாராலையும் அமைதியா போக முடியாது. நல்ல அறிவு இருக்குறவுங்களுக்கு ஒரு விஷயம் சொன்னப் புரியும்.
உங்கக் கிட்ட பேசுறது செவுத்துகிட்ட பேசுற மாதிரி தான் இருக்கு" என பார்வதியை விஜே பார்வதி காட்டமாகப் பேசியிருக்கிறார்.