Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
Bigg Boss Tamil 9 : அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்! மூன்றாவது வார எவிக்ஷனில் நடந்தது என்ன?
விஜய் டிவியின் ஃபேவரைட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 9 சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. எந்த சீசனிலும் இல்லாதபடி இந்த சீசனில் சமூக ஊடக பிரபலங்களை அதிகம் இறக்கியிருந்த நிலையில் அடுத்த சில தினங்களில் சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி வைல்டு கார்டு எண்ட்ரியில் நுழைய உள்ளனர்.
வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, கானா வினோத், துஷார் உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இதுவரை மூன்று பேர் வெளியேறியுள்ளனர்.

நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் வெளியேறி விட்டதாகச் சொல்கிறார்கள்.
பிரவீன் காந்தியும், அப்சரவாவும் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் வெளியேறினர்.
இந்தச் சூழலில் விஜய் சேதுபதி கலந்து கொள்ளூம் வீக் எண்ட் எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.
வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு எவிக்ஷனுக்கான நேரம் வந்தது.

வியானா, பிரவீன், கலையரசன், ரம்யா ஜோ, ஆதிரை, துஷார், அரோரா ஆகியோர் வெளியேற்றத்துக்கான நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில் பிக்பாஸ் ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் ஆதிரையைத் தவிர மற்ற அனைவரும் காப்பாற்றப்பட்டு விட்டனர் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே ஆதிரை மூன்றாவது வார எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.
கடந்த சில தினங்களாகவே இவரது நடவடிக்கைகள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகி வந்தது நினைவிருக்கலாம்.
எஃப் ஜே விடம் இவர் தொடர்ந்து நடந்து கொள்ளூம் விதம், கானா வினோத்திடம் உதைக்கச் செல்வது போல் பாய்ந்தது போன்ற நடவடிக்கைகளை உதாரணமாகச் சொல்லலாம்.
ஆதிரை வெளியேறிய எபிசோடு நாளை ஒளிபரப்பாக இருக்கிறது.!




















