'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறு...
Bihar Election: "RJD, காங்கிரஸ் மேடையில் என் தாய் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார்" - பிரதமர் மோடி
பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் இணைந்து நடத்திய பேரணியில் தன்னையும் தனது தாயையும் குறித்து ஆபாசமான கோஷங்கள் எழுப்பப்பட்டதாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.
இந்தக் கோஷங்கள் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கிறது எனவும் மறைந்த தாய் குறித்து அரசியல் மேடையில் இதுபோன்று அவதூறு பேசப்படும் எனக் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியவில்லை எனவும் பேசியுள்ள பிரதமர் மோடி.

"அம்மாதான் நமக்கு உலகம். நமது சுய மரியாதை. இந்தப் பாரம்பர்யமிக்க பீகாரில் சில நாட்களுக்கு முன்னர் நடந்ததை என்னால் கற்பனைகூடச் செய்து பார்த்தது இல்லை. ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மேடையில் என் தாய் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார்.
இது என் தாயை மட்டும் அவமதிக்கவில்லை. நாட்டில் உள்ள அத்தனை அம்மாக்கள், மகள்கள், சகோதரிகளையும் அவமதிக்கிறது. இதைப் பார்த்தும் கேட்டும் பீகாரின் ஒவ்வொரு தாயும் எவ்வளவு வருந்தியிருப்பீர்கள் என எனக்குத் தெரியும். என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ, அதே அளவு வலியை பீகார் மக்களும் அனுபவிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்" எனப் பேசினார் மோடி.

மேலும், "என் தாய்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பின்னர் எதற்காக அவர் ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மேடையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்?" எனக் கேள்வியும் எழுப்பினார்.
அத்துடன் பெண்களைப் பலவீனமானவர்களாகக் கருதும் அவர்களின் (காங்கிரஸ், ஆர்.ஜே.டி) மனப்பாங்கையும் வெளிப்படுத்துவதாகப் பேசினார்.
சுய உதவிக்குழுக்களுடன் தொடர்புடைய கிராமப்புறப் பெண்களிடையே இருந்து வரும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான ஒரு புதிய கூட்டுறவு முயற்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் மோடி.