அதானிக்கு தாராவி மறுவளா்ச்சி திட்டம் ஒதுக்கப்பட்டதற்கு எதிரான மனு: மும்பை உயா்நீ...
Bipin Rawat : `குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்' - வெளியான அதிர்ச்சி தகவல்!
2021-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி...
அப்போதைய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் வெலிங்டனுக்கு ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர்.
ஆனால், குன்னூர் அருகே உள்ள காட்டேரி மலைப்பாதையில் அதிக மேகமூட்டம் இருந்ததால், அங்கே ராணுவ ஹெலிகாப்டார் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது.
இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேரில் சிலர் சம்பவ இடத்திலேயும், சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் அங்கேயும் உயிரிழந்தனர்.
தற்போது நடந்துகொண்டிருக்கும் மக்களவையில் நேற்று இந்த விபத்து குறித்த நிலைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, '2017 - 2022-ம் ஆண்டுக்காலத்தில், மொத்தம் 34 ராணுவ விமான விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 2021 - 2022-ம் ஆண்டு மட்டும் 9 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஏற்பட்ட விபத்திற்கு 'மனித (விமானிகள்) தவறு' தான் காரணம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், 'எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் விமானத்தை விமானி மேகத்திற்குள் செலுத்தியதே இந்த விபத்திற்கு காரணம்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.