BJP: நன்கொடை பெறுவதில் பாஜக முதலிடம்; ஒரே ஆண்டில் ரூ.4,340 கோடி; மற்ற கட்சிகள் பெற்றது எவ்வளவு?
தேர்தல் நன்கொடை பத்திரங்களை பா.ஜ.க கூட்டணி அரசு அறிவித்த பிறகு பா.ஜ.க-விற்கு கிடைக்கும் நன்கொடை பல மடங்கு அதிகரித்தது. பா.ஜ.க-விற்குக் கிடைத்த நன்கொடையில் சொற்ப அளவு மட்டுமே காங்கிரஸ் கிடைத்துள்ளது. கடந்த 2023-24 ஆம் ஆண்டுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எவ்வளவு நன்கொடை கிடைத்திருக்கிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டுள்ளது.
அத்தகவலில் நன்கொடையில் வழக்கம்போல் பா.ஜ.கவே முன்னிலையில் இருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொடுத்துள்ள தகவலில் பா.ஜ.க 4,340.47 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 83.85 சதவீதம் அதிகமாகும். இதில் பா.ஜ.க 50.96 சதவீதம் அதாவது 2,211.96 கோடியை மட்டுமே செலவு செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,225.12 கோடி நன்கொடையாகக் கிடைத்திருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 171 சதவீதம் அதிகமாகும். காங்கிரஸ் தான் நன்கொடையாக வாங்கிய தொகையில் ரூ.1025.25 கோடியைச் செலவு செய்துவிட்டது. இரு கட்சிகளும் பெற்ற நன்கொடையில் பெரும்பாலான பகுதி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு 4507.56 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளன. இதில் தேசியக் கட்சிகள் 55.99 சதவீதம் நன்கொடை நிதியைப் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 167 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி ரூ. 22 கோடியை நன்கொடையாகப் பெற்று, ரூ. 34 கோடியைச் செலவு செய்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் முந்தைய ஆண்டு பெற்ற நன்கொடையை விட 2023-24ம் ஆண்டில் பெற்ற தொகை குறைவாகும். சுப்ரீம் கோர்ட் தேர்தல் பத்திர திட்டத்தைத் தற்போது ரத்து செய்துவிட்டது. அரசியல் கட்சிகளை மிரட்டி பா.ஜ.க தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அம்மனுக்களை விசாரித்துத் தேர்தல் பத்திரங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play