Rohit Sharma: `கோப்பைகளோடு அரியணை ஏறும் ரோஹித்' - வாய்ப்புக்காக ஏங்கியிருந்தவன் ...
Bodybuilder Bride: மணப்பெண் அலங்காரத்துடன் வந்த பாடிபில்டர்... யார் இந்த சித்ரா புருஷோத்தமன்?
கர்நாடகாவைச் சேர்ந்த பாடிபில்டர் பெண்ணின் திருமண தோற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரம்பரியம் மற்றும் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில், சித்ரா புருஷோத்தமன் என்ற பாடிபில்டர் தனது திருமண தோற்றத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாடிபில்டருக்கான பாவனைகளை வெளிப்படுத்தியும், மஞ்சள் மற்றும் நீல நிற காஞ்சிவரம் சேலையை அணிந்து, தனது உடையில் ரவிக்கையைத் தவிர்த்து, பாரம்பரிய தங்க நகைகளுடன் தனது திருமண தோற்றத்தை நிறைவு செய்திருக்கிறார் சித்ரா.

இதுதொடர்பான வீடியோவை அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து,"மனநிலைதான் எல்லாமே" என்று தலைப்பிட்டு, சித்ரா புருஷோத்தமன் பகிர்ந்திருக்கிறார்.
இந்த வீடியோ 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.

யார் இந்த சித்ரா புருஷோத்தமன்
இன்ஸ்டாகிராமில் 138,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட சித்ரா புருஷோத்தமன், பல அழகுப் போட்டிகளில் பங்கேற்று, மிஸ் இந்தியா ஃபிட்னஸ், வெல்னஸ், மிஸ் சவுத் இந்தியா மற்றும் மிஸ் கர்நாடகா உள்ளிட்ட பட்டங்களை வென்றுள்ளார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஃபிட்னஸ் தொடர்பான பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, சித்ரா புருஷோத்தம் தனது நீண்டகால காதலர் கிரண் ராஜை கரம் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
