குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!
Book Fair: 'பார்ப்பனர் முதல் பறையர் வரை, செந்நிலம்,..' - நரன் பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்னென்ன?
கேசம், சரீரம், பராரி போன்ற அழுத்தமான படைப்புகள் மூலமாக அறியப்படுபவர் எழுத்தாளர் நரன். அண்மையில் ஜூனியர் விகடனில் எழுதிய வேட்டை நாய்கள் தொடர் இரண்டு பாகங்களாக வெளியாகி, வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
நடந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில், எழுத்தாளர் நரனைச் சந்தித்துப் பேசினோம்.
இன்றைய இளம் வாசகர்களுக்குத் தாங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் பற்றிக் கேட்டோம். தனது சொந்த படைப்பான வேட்டை நாய்கள் (இரண்டு பாகங்கள் - விகடன் பிரசுரம்), டி. தர்மராஜ் எழுதிய 'அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை' மற்றும் 'யாதும் காடே, யாவரும் மிருகம்', அன்புள்ள தாத்தா பாட்டிக்கு (சிறுகதை), ஜெயராணி எழுதிய செந்நிலம், முத்துராசா குமார் எழுதிய 'கொடுக்கு' சிறுகதை தொகுப்பு போன்ற நூல்களை வாசகர்கள் முயலலாம் என்றார்.
இவரது சால்ட் பதிப்பக கடையில் பழங்காலத்து Type writer, 1950களில் அறிமுகமான தொலைப்பேசிகள் போன்ற பொருட்கள் இருப்பது குறித்துக் கேட்டதற்கு, "வருஷம் ஒரு தீம்ல ஸ்டால் போடுகிறோம். இந்த வருடம் 'விண்ட்ஜ்' தீம்" என்றார்.
Vikatan Audio Books
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...