செய்திகள் :

Book Fair: பார்வை சவால் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி கடை, நூல் கொடை; கவனிக்க வைக்கும் பாரதி டிரஸ்ட்

post image

48வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் YMCAவில் நடைபெற்று வருகிறது. இதில் அரங்கம் 102 பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால், பார்வை சவால் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ப்ரெய்லி புத்தகங்கள் அங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளால், மாற்றுத்திறனாளிகளுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது இந்த அரங்கம். தமிழில் வெளிவந்த கலை, இலக்கிய நூல்கள் ப்ரெய்லி புத்தகங்களாகக் கிடைக்கின்றன. மேலும், இந்தியாவில் முதல் ப்ரெய்லி புத்தக அரங்கும் இதுதான் என்பது தனிச்சிறப்பு.

மாற்றுத்திறனாளிகளின் படைப்புகள்:

பார்வை சவால் மாற்றுத்திறனாளிகள் எழுதிய கதைகள், கவிதைகள், நாவல்கள், போட்டி தேர்வு நூல்கள் போன்றவை இந்த அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்விக்குச் சில ப்ரெய்லி நூல்கள் உள்ளன. கல்லூரிப் படிப்பிற்குப் பெரும்பாலும் ப்ரெய்லி நூல்கள் கிடைப்பதில்லை.

பாரதி ட்ரெஸ்ட்

“மொழியினைப் பிறர் வாசித்துக் கேட்கக் கிடைக்கும் அனுபவிப்பதை விட, தாங்களே வாசித்து அனுபவம் பெறுவது அலாதியானது. அதற்கு ப்ரெய்லி நூல்கள் வழி வகை செய்கின்றன. ஆண்ட்ராய்டு மூலம் பிடிஎஃப் புத்தகங்கள் படிக்க உதவும் மென்பொருள்களும் உதவிக்கரமாக உள்ளன. ப்ரெய்லியிலும் படிக்கிறோம், வாய்ஸ் மூலமாகவும் படிக்கிறோம்” என்கிறார் மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகவுள்ள மு. ரமேஷ்.

இன்க்ளூஸிவ் ஸ்பேஸ்:

பார்வை சவால் மாற்றுத்திறனாளிகளின் படைப்புலகம் குறித்து மு. ரமேஷ் பேசும்போது, “மையநீரோட்டத்திலிருந்து விலகக் கூடாது. அனைத்து புலங்களும் கொண்டவர் ஒரு கருத்தைக் கூறுவதற்கும், மாற்றுத்திறனாளி ஒருவர் ஒரு கருத்தைக் கூறுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. மொழி காட்சி மொழியாக இருக்கிறது.

மு. ரமேஷ்

ஆனால் எங்கள் மொழியே வித்தியாசமானது. பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் பேச்சு மொழியே பிரதான மொழி. அந்த மொழி மாற்றத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்” என்று கூறினார்.

சாலச்சிறந்தது நூல் கொடை:

பாரதி அறக்கட்டளை சார்பாக இந்த முன்னெடுப்பு நிகழ்ந்துள்ளது.

பாரதி அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் பயிற்சிகள், உறைவிடம் போன்றவை அளிக்கப்படுகின்றன. உங்கள் வீட்டில் இருக்கும் நூல்களை மாற்றுத்திறனாளி வாசகர்களுக்குப் படிக்க நூல் தானம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Book Fair: "எழுத்து ஒரு தவம்; அதை நேசித்து வாசித்தால்..." - ஷோபா சக்தியின் பரிந்துரைகள் என்னென்ன?

சென்னையில் நடைபெற்று வரும் 48வது புத்தகக் கண்காட்சிக்கு வரும் எழுத்தாளுமைகளைச் சந்தித்து அவர்களின் பரிந்துரைகள், கடந்த ஆண்டு படித்த முக்கிய படைப்புகள் என்று தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறோம். அந்த வகையி... மேலும் பார்க்க

Book Fair: "பணக்கார எழுத்தாளர்களின் படைப்பு மட்டுமே வாசகர்களை எளிதில் சேர்கிறது" - விக்கிரமாதித்தன்

தமிழ் கவிதை உலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கவிஞர் விக்கிரமாதித்தன். நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்துப் பேசினோம்."கோட்டை முதல் ஊராட்சி வரை தமிழ் வாழ்க என்று ... மேலும் பார்க்க

Book Fair: "திருநர்களைப் பற்றி நாங்களே சொல்லத்தான் 'திருநங்கை ப்ரெஸ்'" - கிரேஸ் பானு

சாதி, மத பேதங்களைப் போல் இந்த நாட்டில் பாலின பேதங்களும் தலைவிரித்தாடி வருகிறது. இந்த பாலினப் பேதங்களால் பெண்களைப் போல, இன்னும் சொல்லப்போனால் அவர்களை விட அதிகமாகவே பாதிப்புக்குள்ளாவது திருநர் சமூகத்தின... மேலும் பார்க்க

Book Fair: 'பார்ப்பனர் முதல் பறையர் வரை, செந்நிலம்,..' - நரன் பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்னென்ன?

கேசம், சரீரம், பராரி போன்ற அழுத்தமான படைப்புகள் மூலமாக அறியப்படுபவர் எழுத்தாளர் நரன். அண்மையில் ஜூனியர் விகடனில் எழுதிய வேட்டை நாய்கள் தொடர் இரண்டு பாகங்களாக வெளியாகி, வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப... மேலும் பார்க்க

Book Fair: "ஆண்கள் எழுதுவதால் 'His'tory; எனவே 'Her Stories பதிப்பகம்' என வைத்தோம்" - நிவேதிதா லூயிஸ்

பெண்களுக்காகப் பெண்களால் தொடங்கப்பட்ட பதிப்பகம்தான் Her Stories. தற்போது நடந்துகொண்டிருக்கும் 48வது சென்னை புத்தகக் காட்சியில் Her Stories அரங்குக்குச் சென்று எழுத்தாளர் நிவேதிதா லூயிஸிடம் பேசினோம்."க... மேலும் பார்க்க

Book Fair: "ஆனா ஒண்ணு.. எழுத்துக்கு மரணமில்ல" - எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்ன?

சென்னையில் நடைபெற்று வரும் 48வது புத்தகக் கண்காட்சியில் வாசகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எஸ்.ரா என்று அழைக்கப்படும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், தனது தேசாந்திரி பதிப்பகக் கடையில் உற்ச... மேலும் பார்க்க