செய்திகள் :

Cannes 2025: "அமெரிக்காவின் கலைவிரோத அதிபர்" - டிரம்பை விமர்சிக்கும் ஹாலிவுட் நடிகர்

post image

78வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

இந்தத் திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் என்ற அடிப்படையில் 'Palme d’Or' என்ற உயரிய விருதை வருடந்தோறும் மூத்த கலைஞருக்குக் கொடுத்து கேன்ஸ் கௌரவப்படுத்தும்.

Robert De Niro - Cannes Film Festival 2025
Robert De Niro - Cannes Film Festival 2025

இந்த ஆண்டு இந்த விருதை ஹாலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான ராபர்ட் டி நீரோ பெற்றிருக்கிறார்.

விருதைப் பெற்றதோடு, அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளை அவர் மேடையில் விமர்சித்துப் பேசியது பேசுபொருளாகியிருக்கிறது.

அவர் பேசுகையில், "எங்கள் நாட்டில் ஜனநாயகத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடி வருகிறோம்.

இன்று நாம் இங்கு ஒன்றுகூடியிருப்பது போல, கலை என்பது மக்களை ஒன்றிணைக்கும் ஒன்று.

கலை உண்மையைத் தேடுகிறது மற்றும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. அதனால்தான் சர்வாதிகாரிகளுக்கு கலை அச்சுறுத்தலாக உள்ளது.

அதனால்தான் நாமும் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறோம்.

அமெரிக்காவின் கலைவிரோத அதிபர், நமது முதன்மையான கலாசார நிறுவனங்களில் ஒன்றான கென்னடி மையத்தின் தலைவராகத் தன்னை நியமித்துக்கொண்டார்.

Robert De Niro - Cannes Film Festival 2025
Robert De Niro - Cannes Film Festival 2025

அவர் கலை மற்றும் கல்விக்கான நிதியைக் குறைத்துவிட்டார். இப்போது, அவர் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவிகித வரி விதிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

படைப்பாற்றலுக்கு விலை வைக்க முடியாது. இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது அமெரிக்காவின் பிரச்னை மட்டுமல்ல, இது உலகளாவிய பிரச்னை.

திரைப்படத்தைப் பார்ப்பதுபோல இருக்கையில் அமர்ந்து பின்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. சுதந்திரத்தைப் பற்றி கவலைப்படும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் சமயங்களில் நாம் வாக்களிக்க வேண்டும். இந்தத் திரைப்பட விழாவில் கலையைக் கொண்டாடுவதன் மூலம் நமது வலிமையையும் அர்ப்பணிப்பையும் காட்டுவோம்," என்றார்.

Thunderbolts* Review: கம்பேக் கொடுக்கும் MCU? ஆர்வத்தை மீட்டெடுக்கிறதா இந்த தண்டர்போல்ட்ஸ்*?

"அளவுக்கு மீறினால் எதுவுமே திகட்டிவிடும்" என்பதற்குச் சரியான உதாரணம் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்தான். 'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' படத்தில் உச்சத்தைத் தொட்ட MCU-வுக்கு அதன்பிறகு தொடர் சறுக்கல்கள்தான்.... மேலும் பார்க்க

Demi Moore: உலகின் மிக அழகானப் பெண்... `என் அழகுக்கு இதுதான் காரணம்' - 63 வயது நடிகை சொல்வது என்ன?

அழகு என்றாலே அது இளம் வயதுனருடன் மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது. இந்தக் கருத்தை மாற்றும் வகையில் பீப்புல் பத்திரிக்கை 62 வயதான ஹாலிவுட் நடிகைக்கு 2025-ம் ஆண்டின் உலகின் மிகவும் அழகானப் பெண் என்றப் பட... மேலும் பார்க்க

Until Dawn Review: `செத்துச் செத்து விளையாடுவோமா?' - திகில் அனுபவம் தருகிறதா இந்த லூப் ஹாரர் சினிமா?

காட்டிற்குள் இருக்கும் பள்ளத்தாக்குப் பகுதி ஒன்றில் தொலைந்து போன தன் சகோதரி மெலனியைத் தேடி க்ளோவர் (எலா ரூபின்) மற்றும் அவருடைய நான்கு நண்பர்கள் செல்கிறார்கள். காட்டிற்குள் சென்று கொண்டிருக்கும்போதே ஒ... மேலும் பார்க்க