நாமக்கல்: திடீர் வாந்தி, மயக்கம்; கல்லூரி மாணவர்கள் 128 பேர் மருத்துவமனையில் அனு...
Career: மாதம் ரூ.11.25 லட்சம் வரை சம்பளம்; SBI வங்கியில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
பிராடக்ட், முதலீடு மற்றும் ஆய்வுத் துறையில் தலைவர், ரீடெயில் துறையில் மண்டலத் தலைவர், பிராந்திய தலைவர் போன்ற ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பணிகள். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 103
வயது வரம்பு: ஒவ்வொரு பணிகளுக்கேற்ப வயது வரம்பு மாறுபடுகிறது. குறைந்தபட்சமாக 25, அதிகபட்சமாக 50 (சில பிரிவினருக்குத் தளர்வுகளும் உண்டு)
சம்பளம்: அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.135 லட்சம்; குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 20.60 லட்சம்.

கல்வித் தகுதி: கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும். இதுபோக, பணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட கல்வித்தகுதிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், பணிகளுக்குத் தகுந்தவாறு பணி அனுபவங்களும் கேட்கப்படுகின்றன.
அந்த விவரங்களைத் தெரிந்துகொள்ள பக்கம் 5 - 9
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஷார்ட் லிஸ்டிங், தனிப்பட்ட/தொலைபேசி/வீடியோ நேர்காணல்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:recruitment.sbi.bank.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 11, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
















