செய்திகள் :

China: சீன அரசு திட்டமிட்டிருக்கும் பிரமாண்ட ரயில் திட்டம்; இந்தியாவிற்கு ஏற்படும் சிக்கல் என்ன?

post image

பிரமாண்டமான ரயில் பாதை திட்டத்தைச் செயல்படுத்த சீன அரசு முடிவுசெய்திருக்கிறது.

இது, சீனாவின் மிகப்பெரிய கனவு ரயில் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சீனாவின் ஜின்ஜியாங்கில் உள்ள ஹோடானை, தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஷிகாட்ஸே உடன் இணைக்கும் வகையில் இந்த ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த சீன அரசு முடிவுசெய்திருக்கிறது.

சீன அரசு திட்டமிட்டிருக்கும் பிரமாண்ட ரயில் திட்டம்
சீன அரசு திட்டமிட்டிருக்கும் பிரமாண்ட ரயில் திட்டம்

2008 ஆம் ஆண்டே இதற்கான திட்டமிடலை சீன அரசு துவங்கியிருக்கிறது. 1 லட்சம் கோடி செலவில் 2,000 கி.மீ தூரத்துக்கு இந்த இரயில் பாதை உருவாக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தத் திட்டம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே பதற்றத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அக்சாய் சின்னில் இருந்து, 'ஜி - 219' தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் நம் நாட்டின் எல்லையை ஒட்டி இந்த ரயில் பாதை அமையவிருக்கிறது.

அக்சாய் சின் என்பது, இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரி வரும் ஒரு எல்லைப் பகுதி.

கடந்த 1950க்கு பிற்பகுதியில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சர்ச்சைக்குரிய இடமாகவே இருந்து வருகிறது.

கடந்த 1962ல் நடந்த இந்திய சீன போரின்போது இந்த இடத்திற்காக நடந்த சண்டையில், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இருநாட்டு எல்லைக்கும் அக்சாய் சின் ஒரு மையப்புள்ளியாக இருப்பதால், சீனா தன் படைகளை எல்லைக்கு எளிதில் அனுப்ப இது பெரும் உதவியாக இருக்கும்.

சீன அரசு திட்டமிட்டிருக்கும் பிரமாண்ட ரயில் திட்டம்
சீன அரசு திட்டமிட்டிருக்கும் பிரமாண்ட ரயில் திட்டம்

அங்கு ரயில் பாதை அமைக்கப்படும் பட்சத்தில், சீனாவில் இருந்து ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் கொண்டு வருவது எளிதாகிவிடும். எனவே, இந்தத் திட்டம் இந்தியாவிற்கு ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்.

இருநாட்டு எல்லைக்கும் அக்சாய் சின் ஒரு மையப்புள்ளியாக இருப்பதால், சீனா தன் படைகளை எல்லைக்கு எளிதில் அனுப்ப இது பெரும் உதவியாக இருக்கும். அங்கு ரயில் பாதை அமைக்கப்படும் பட்சத்தில், சீனாவில் இருந்து ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் கொண்டு வருவது எளிதாகிவிடும்.

எனவே, இந்த திட்டம் இந்தியாவிற்கு ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும். இதனால், நம் நாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பிலும், ஆலோசனையிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"போராடும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்" - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை ரிப்பன் மாளிகை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும்" - ஸ்டாலின் வலியுறுத்தல்

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

ஒரே நாளில் விசாரணைக்கு வரும் 2 வழக்குகள்; முக்கிய கட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தப் போராட்டம் சார்ந்து சென்னை ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில்

எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க தலைவர்... மேலும் பார்க்க

சமூக விரோதிகளின் கூடாரமாகும் ஆண்டிபட்டி வாரச் சந்தை கடைகள்; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-150 கிராம மக்கள் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இந்த காய்கறி சந்தைக்குத்... மேலும் பார்க்க

Stray Dogs: ``ரூ.15,000 கோடி இருக்கிறதா?'' - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேனகா காந்தி கேள்வி

தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர... மேலும் பார்க்க