வீரவநல்லூரில் குடிநீா் திட்ட ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
Corporate: Sports Shoe-வில் வந்ததால் பணிநீக்கம்; சட்டப்படி போராடி ரூ.32 லட்சம் இழப்பீடு வாங்கிய பெண்
இங்கிலாந்து நாட்டில் வேலைப்பார்க்கும் இடத்துக்கு ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து வந்ததற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண், 37,700 டாலர்கள் இழப்பீடு பெற்றுள்ளார்.
எலிசபெத் பெனஸ்ஸி என்ற 20 வயது பெண் 18 வயதில் (2022) மேக்ஸிமஸ் யு.கே சர்வீசஸ் என்ற நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அந்நிறுவனத்தின் ஆடைக் கட்டுப்பாடுகள் குறித்து அவருக்குத் தெரியாததால், ஒரு நாள் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து பணிக்குச் சென்றுள்ளார்.
முன்னதாக அங்குப் பணியாற்றும் மற்ற சிலரும் அதுபோன்ற ஷூ அணிந்து வந்ததாகவும் கூறுகிறார். ஆனால் அவரை மட்டும் மோசமாக நடத்தியதாகவும், நிறுவனத்தை விட்டு வெளியேற்றியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலாளர் அவரைக் குழந்தை போல நடத்தியதாகவும் அவரது ஷூ தேர்வை விமர்சித்ததாகவும் வேலை வாய்ப்பு தீர்ப்பாயத்தில் புகாரளித்துள்ளார். மேலும் அந்த நிறுவனத்திற்கு எப்போதும் இளம் பணியாளர்களிடம் குறை கண்டுபிடிக்கும் போக்கு இருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பலரும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தான்தான் வயதில் சிறிய ஊழியர் என்பதையும் பெனஸ்ஸி சுட்டிக்காட்டியிருக்கிறார். வயதில் சிறியவராக இருப்பதனாலேயே micromanage செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
(micromanage: சின்ன சின்ன விசயங்களைக் கூட கண்டறிந்து குற்றம் சுமத்துவது / கீழ் பணியாற்றுபவர்களைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவது)
மேக்ஸிமஸ் யு.கே சர்வீஸ் நிறுவனம் பெனஸ்ஸியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆனாலும் தீர்ப்பாயம் அவருக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதனால் 37,700 டாலர்கள் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது கிட்டதட்ட 32 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய்.
Corporate அலுவலகங்களில் குறைந்த வயதுடையவர்களை நடத்தும் விதம் குறித்து இந்த வழக்கு விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக ஜென்சி தலைமுறையினர் தங்களின் வயது மற்றும் குறைந்த அனுபவம் காரணமாகத் தாழ்வாக நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...